தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையானவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை தமன்னா இந்தியத் திரைப்பட நடிகை. சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியாவின் மகள். 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம்மும்பையில், இந்தியாவில் பிறந்தார். அவளுக்கு ஆனந்த் என்ற ஒரு அண்ணன் உண்டு. அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவர்.
இவர், 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானாவர். பின்னர், தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.
இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். தனக்கான ஒரு இடத்தை சினிமாவில் கச்சிதமாக பிடித்து கொண்டவர். சமீபத்தில் வந்த ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து அவர் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார்.
சீனுராமசாமி இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி உதயநிதி. முன்பே இந்த இயக்குனரின் படமான தர்மதுரை தமன்னாவுக்கு நல்ல பெயரை கொடுத்தது படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில், நடிகை தமன்னா கண்ணே கலைமானே படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தினை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வங்கி பணியாளராக நடித்துள்ளார் தமன்னா. இது குறித்து அவர் கூறும்போது சீனுவின் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சிக்குரியது.
உதயநிதி ஒரு சென்சிட்டிவ் ஆக்டர். இந்தப் படத்தில் அவர் வித்யாசமாக நடித்துள்ளார். நிச்சயம் அனைவருக்கும் அவரது கதாபாத்திரம் பிடிக்கும். இந்தப் படம் இப்போதுதான் ஷூட் பண்ண ஆரம்பித்தது போலுள்ளது, ஆனால் அதற்குள் முடியப் போகிறது என்று வியப்புடன் பதிவிட்டிருந்தார் தமன்னா. இந்த படம் என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.