இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மானின் மகன் செய்த செயல்: ட்விட்!!

இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மானின் மகன் செய்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகின்றது!

Last Updated : Jun 5, 2018, 03:56 PM IST
இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மானின் மகன் செய்த செயல்: ட்விட்!! title=

ஏ. ஆர் ரஹ்மான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. இவருக்கு காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்ததின் மூலம் இசைப்புயல் என்று அழைக்கப்படுகிறார். 

இவர், ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இவர், கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். 

இந்நிலையில், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானா ஏ. ஆர் ரஹ்மான் மகன் அமீனின் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்த அரசு பொது தேர்வில் அமீன் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்திருக்கிறார். இதனை, தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஏ. ஆர் ரஹ்மான் தன் மகனை வாழ்த்தியதோடு ஒரு தந்தையாக தானும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News