புனே-வை சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர், சிக்கலான தாடை அறுவை சிகிச்சை ஒன்றிற்கு பின்னர தற்போது தன் வாயை மூடியுள்ளார்!
ஒரு சிறு விபத்து காரணமாக தன் தாடையில் ஏற்பாட்ட கோளாறு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக இவரால் தன் வாயை மூட முடியாமல் போனது. இதனால் உணவை உட்கொள்வது முதல் தண்ணீர் குடிப்பது வரை என அனைத்திலும் சிரமத்தினை அனுபவித்து வந்தார்.
இதன் காரணமாக மிக விரைவிலேயே இவரது உடல் எடை குறையவும் தொடங்கியுள்ளது. மிகுந்த சோர்வு மனப்பான்மைக்கு சென்றுள்ளார்.
மருத்தவர்களை அனுகுகையில் ஆரம்பத்தில் அவரது வயதினை முன்வைத்து அறுவை சிகிச்சைக்கு காலம் குறிக்க மறுத்துவிட்டனர். ஒரு மாத்ததிற்கும் மேலாக இவர் துயரப்பட்டு வந்த நிலையில் அவருக்கு உதவ மருத்துவர் தாதே முன்வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்களன்று அவரக்கு அருவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இப்பிரச்சனை தீர்க்கப்பட்டது. சாயத்திரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடந்த இந்த அறுவை சிகிச்சையினை மருத்துவர் பிரசாத் தாதே வெற்றிகரமாக முடித்துள்ளார்.
ஒரு மாத கால இடைவெளிக்கு பின்னர் தற்போது இவர் தன் பிரச்சணைகளில் இருந்து மீண்டு இயல்பாக உணவு உண்னுகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்!