Pakistan: ஜகோபாபாத்தில் உலகில் எங்கும் பதிவிடப்படாத அளவு ரெகார்ட் வெப்பநிலை பதிவு

பாகிஸ்தானில் நகரத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் வெப்ப பாதிப்பு நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 07:17 PM IST
  • பாகிஸ்தானில் தீவிர வெயிலால் மக்கள் அவதி.
  • பல நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் பதிவு.
  • மனித உடல் தாங்க முடியாத அளவு வெப்ப அலை.
Pakistan: ஜகோபாபாத்தில் உலகில் எங்கும் பதிவிடப்படாத அளவு ரெகார்ட் வெப்பநிலை பதிவு  title=

இஸ்லாமாபாத்: பாக்கிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கடக ரேகையில் அமைந்திருக்கும் ஜேக்கபாபாத்தில் கோடைக்கால வெப்பநிலை 52 ° C (126 பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 200,000 மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் வெப்பத்திற்கு பெயர் பெற்றது. கடுமையான வெப்ப அலைகள் மக்களை தங்கள் வீடுகளுக்குள் முடக்கிவைக்கின்றன. 

"மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதில்லை, வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை தாண்டும்போது பெரும்பாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன" என்று அப்துல் பாகி தி என்ற ஒரு ஒரு பாகிஸ்தான் (Pakistan) கடைக்காரர் டெலிகிராஃபிடம் தெரிவித்தார்.

"இது நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு அதிக வெப்பம்” என்று மற்றொரு வணிகர் தெரிவித்தார். 

நகரத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் வெப்ப பாதிப்பு நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். ஆகையால் இவர்களது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்படுகின்றது. சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழுடன் உரையாடிய வல்லுநர்கள், வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கலவையுடன் நகரம் இப்போது மனித உடல் தாங்கக்கூடிய வெப்பநிலை வரம்பை அதிகாரப்பூர்வமாக தாண்டி விட்டது.

கடந்த ஆண்டு, தனது சகாக்களுடன் லவ்பரோக் பல்கலைக்கழகத்தில் காலநிலை அறிவியலில் விரிவுரையாளராக இருக்கும் மேத்யூஸ், உலகளாவிய வானிலை நிலைய தரவுகளை ஆராய்ந்தபோது, ​​ஜேக்கபாபாத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில், துபாயின் (Dubai) வடகிழக்கில் உள்ள ராஸ் அல் கைமா ஆகிய இரு நகரங்களும் தற்காலிகமாக கொடிய வெப்ப நிலைகளைத் தாண்டிவிட்டதைக் கண்டறிந்தனர்.

ALSO READ: Exclusive: ISIS பயங்கரவாதிகளாக மாறிய 24 பாகிஸ்தான் பெண்களின் பட்டியல் வெளியீடு

இந்த முடிவுக்கு வர, ஆராய்ச்சியாளர்கள் ஈரமான விளக்கு வெப்பநிலையை ஆய்வு செய்தனர். இந்த செய்முறையில், ஈரத்துணியால் சுற்றப்பட்ட ஒரு தெர்மோமீட்டர் மீது காற்று செலுத்தப்படுகின்றது. 100% ஈரப்பதத்தில், ஈரமான விளக்கின் வெப்பநிலை காற்று வெப்பநிலைக்கு சமமாக இருக்கும்; குறைந்த ஈரப்பதத்தில், ஈரமான விளக்கு வெப்பநிலை (Temperature) உலர்ந்த விளக்கை விட குறைவாக இருக்கும். இதற்கு ஆவியாகும் நிலையில் நடக்கும் குளிரூட்டல் காரணமாக இருக்கும். இந்த செயல்முறை வெட் பல்ப் முறை என கூறப்படுகின்றது.

விவசாய மையமான ஜேக்கபாபாத் இந்த வெப்பநிலை அளவுகளை பலமுறை கடந்துவிட்டது. ஜூலை 1987 இல், இந்த நகரத்தின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை மீறியது. பின்னர் மீண்டும் ஜூன் 2005, ஜூன் 2010 மற்றும் ஜூலை 2012 இல் இந்த வெப்பநிலை அளவுகள் மீறப்பட்டன.

35 டிகிரி செல்சியஸின் ஈர விளக்கு ரீடிங், ஆரோக்கியமான மக்களுக்கு கூட ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நிலையில், வியர்வை மூலமாகக் கூட உடலை குளிர்விக்க முடியாது.

ALSO READ:Pakistan: பல மணி நேர மின் தடையினால் முடங்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News