லாகூர்: பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம். தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தி பீதியைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஒரு குழுவினர், கடையில் திருடியதாகக் கூறி, ஒரு இளம்பெண் உட்பட நான்கு பெண்களை, இழுத்துச் சென்று, அடித்துள்ளனர்.
பாகிஸ்தானின் (Pakistan) லாகூரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசலாபாத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. சில நபர்கள், ஒரு இளம்பெண் உட்பட நான்கு பெண்களின் ஆடைகளை களைந்து விடுகிறார்கள். இந்த வீடியோவில், தங்கள் உடலில் போர்த்திக்கொள்ள, துணியை அளிக்குமாறு சுற்றியிருக்கும் மக்களிடம் அந்த பெண்கள் கெஞ்சுவதைக் காண முடிகின்றது. ஆடைகளை தர மறுக்கும் அவர்கள், பெண்களை மிண்டும் கொம்புகள் கொண்டு அடிக்கிறார்கள்.
பெண்கள் கதறி அழுதுகொண்டே, தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அவர்களது அழுகைக்கு செவி சாய்ப்பவர்கள் யாரும் இல்லை. நிர்வாணமாக, அவர்கள் ஒரு மணி நேரம் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
ஐந்து பேர் கைது
இந்த சம்பவத்தின் இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பஞ்சாப் காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது.
ALSO READ | Pakistan: எப்போதும் விவாகரத்துக்கு ரெடி! இது பாகிஸ்தான் பெண்களின் தனிவிருப்பம்
"இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து முக்கிய குற்றவாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று பஞ்சாப் காவல்துறை செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை (Police Investigation) நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விதிகளின் கீழ் சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் மற்றும் பலருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விவரங்களின் படி, தாங்கள், பைசலாபாத்தில் உள்ள பாவா சாக் சந்தைக்கு குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை சேகரிக்கச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்களின் ஒருவர் கூறினார்.
“தாகம் எடுத்த நாங்கள் உஸ்மான் எலெக்ட்ரிக் ஸ்டோருக்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால் அதன் உரிமையாளர் சதாம் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டினார். அவர்கள் எங்களை அடிக்கத் துவங்கினர். எங்கள் ஆடைகளை உருவி, நிர்வாணப்படுத்தி, அடித்து, தெருக்களில் இழுத்துச் சென்றனர். எங்களை நிர்வாணப்படுத்திய பிறகு, எங்களை வீடியோ எடுத்தனர். அங்கிருந்த மக்களில் ஒருவர் கூட அந்த கொடியவர்களை தடுத்து எங்களை காக்க முன்வரவில்லை” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதாம் உட்பட ஐந்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவான மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக பைசலாபாத் காவல்துறை தலைவர் டாக்டர் அபித் கான் தெரிவித்தார்.
ALSO READ | பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா அரசு முறையில் கலந்து கொள்ளாது: அதிபர் ஜோ பைடன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR