UNHRCஇல் ரஷ்யா சஸ்பெண்ட்! இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாதது ஏன்?

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்துவதற்கான எதிர்வினை இது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2022, 08:19 AM IST
  • UNHRCஇல் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்
  • ஐநா தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா
  • காரணத்தை தெளிவாக்கும் இந்தியத் தரப்பு
UNHRCஇல் ரஷ்யா சஸ்பெண்ட்! இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாதது ஏன்? title=

உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ரஷ்யாவை தற்காலிகமாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

இதற்கு முன்னதாகவும் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்கள் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், தீர்மானத்தை புறக்கணித்த நாடுகள் அனைத்துமே ரஷ்யாவின் நட்பு நாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காததற்கான காரணம் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை விலக்குவது தொடர்பான வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்கும் தீர்மானம் குறித்து இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்டதால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) இருந்து ரஷ்யாவை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) நிறைவேற்றப்பட்டது. 

இந்த பிரேரணைக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. அதே நேரத்தில், 58 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தன, இதில் இந்தியாவும் அடங்கும். இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) இருந்து ரஷ்யாவை விலக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி இது குறித்து கூறுகையில், 'மோசமடைந்து வரும் சூழ்நிலை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், மேலும் அனைத்து விரோதப் போக்கையும் முடிவுக்கு கொண்டு வருமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம். அப்பாவி மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, ​​இராஜதந்திரம் மட்டுமே சாத்தியமான விருப்பமாக கருதப்பட வேண்டும்.

'அமைதியின் பக்கத்தை மட்டுமே இந்தியா தேர்ந்தெடுக்கும்' என்று தனது முடிவிற்கான காரணத்தை எடுத்துரைத்த இந்தியா, உக்ரைனில் மோதல் தொடங்கியதில் இருந்து, அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண ஆதரவாக நின்றோம் என்று கூறியுள்ளது. 

மேலும் படிக்க | புச்சா நகர் படுகொலை தொடர்பாக தனிப்பட்ட விசாரணை தேவை - இந்தியா

இரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவி மக்களை விலையாகக் கொடுத்தும் தீர்வு காண முடியாது என்று இந்தியா தெளிவாக நம்புகிறது. இந்தியா எந்தப் பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றால், அந்த பக்கம் அமைதிக்காகவும், வன்முறைக்கு உடனடி முடிவுக்காகவும் இருக்கும்.என்று கூறியது.

இந்த வார தொடக்கத்தில், உக்ரைனின் புச்சாவில் நடந்த படுகொலைகளைக் கண்டித்தும், சுதந்திரமான விசாரணைக்கு அழைப்புவிடுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தனது வலுவான அறிக்கையை வெளியிட்டது.

புச்சா பற்றிய தகவல்கள் கவலை அளிப்பதாக இந்தியா கூறியிருந்தது. இந்த கொலைகளை நாங்கள் திட்டவட்டமாக கண்டிக்கிறோம் மற்றும் சுதந்திரமான விசாரணைக்கான கோரிக்கையை ஆதரிக்கிறோம். இதற்கு முன்னர், 2011 ஆம் ஆண்டு UNHRC இலிருந்து ஒரு உறுப்பு நாடு  இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கொரோனா கவச் பாலிசியை செப்டம்பர் வரை நீட்டித்தது IRDAI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

மேலும் படிக்க | உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

பு

Trending News