உலகம் முழுவதும் பண வீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், உலகளாவிய அளவில் வறுமைக் கோடு என்பதற்கான வருமான வரையறை அவ்வப்போது மாற்றப்படுகிறது.
தற்போது, 2015 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதற்கிடையில் பல விஷயங்கள் மாறியுள்ளன. எனவே உலக வங்கி இந்த புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது. இந்த அளவு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும்.
தற்போது, ஒரு நபர் ஒரு நாளைக்கு 167 ரூபாய் ($2.15) க்கும் குறைவாக சம்பாதித்தால், அவர் மிகவும் ஏழ்மையானவராகக் கருதப்படுவார். இது உலக வங்கியின் புதிய தரநிலை. முன்னதாக, ரூ.147 சம்பாதிக்கும் நபர் மிகவும் ஏழ்மையாக கருதப்பட்டார். பணவீக்கம், அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, தீவிர வறுமைக் கோடு உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் உலக வங்கி அவ்வப்போது தர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது.
புதிய உலகளாவிய வறுமைக் கோடு 2017 ஆண்டின் பண வீக்க நிலையின் அடிப்படையில் $2.15 ஆக நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு $2.15க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் எவரும் தீவிர வறுமையில் வாழ்பவராகக் கருதப்படுகிறார். 2017 ஆம் ஆண்டில், உலகளவில் 700 மில்லியன் மக்கள் மட்டுமே இந்த நிலையில் இருந்தனர், ஆனால் இந்த புதிய தர நிலையினால் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரஷ்யப் போரின் 100வது நாள்: 20 சதவீத உக்ரைனை ஆக்ரமித்த ரஷ்யா
சர்வதேச வறுமைக் கோட்டின் அதிகரிப்பு, 2011 மற்றும் 2017 க்கு இடையில் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நிலவும் அடிப்படை உணவு, உடை மற்றும் வீட்டுத் தேவைகளின் அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. வேறு வகையில் கூறுவதானால், 2017 விலையில் $2.15 என்பதன் உண்மையான மதிப்பு 2011 விலையில் $1.90 ஆகும்.
இந்தியாவின் வறுமை நிலை குறைந்துள்ளது
இந்தியாவில், வறுமை கோட்டிற்கு கீழே வாழும் BPL குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தியாவைப் பற்றி பேசுகையில், 2011 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் BPL குடும்பங்களின் 12.3% குறைந்துள்ளது. இதற்குக் காரணம் கிராமப்புறத்தில் ஏழ்மை குறைந்துள்ளது. அதாவது அங்கு வருமானம் அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் ஒப்பீட்டளவில் வருமானம் அதிகரித்துள்ளதை அடுத்து, அங்குள்ள மிகவும் ஏழ்மையானவர்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டின் 22.5 சதவீதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 10.2 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், இதில் உலக வங்கியின் தினசரி வருமானமான 1.90 டாலர்கள் என்ற பிபிஎல் தர நிலையை அடிப்படையாக கொண்டது .
மேலும் சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு கணக்கெடுப்புக் காலங்களுக்கு (2013 மற்றும் 2019) இடையே மிகச்சிறிய அலவிலான சொத்துக்களை கொண்ட விவசாயிகளின் உண்மையான வருமானம் ஆண்டுக்கு 10 சதவீத அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன, அதே சமயம் பெரிய அளவில் சொத்து வைத்திருப்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் இரண்டு சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe