வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் நான்கு நாள் தங்கியிருந்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு (White House) திரும்பினார். டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பின் (Melania Trump) COVID-19 தொற்று சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததாக அதிபர் அக்டோபர் 2 ம் தேதி அறிவித்தார். திங்கள்கிழமை காலை தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவேன் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார். அவர் 20 ஆண்டுகள் முன்பு இருந்ததை விட இப்போது ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
டிரம்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?
சோதனை அடிப்படையிலான ஆன்டிபாடி காக்டெய்ல்
ட்ரம்ப் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, பயோடெக்னாலஜி நிறுவனமான ரெஜெனெரான் தயாரித்த ஒரு சோதனை அடிப்படையிலான மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சையைப் (Antibody Therapy) பெற்று வருகிறார். காக்டெய்லில் இரண்டு ஆன்டிபாடிகள் உள்ளன - ஒன்று, COVID-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்ட ஒரு மனிதனிடமிருந்து எடுக்கப்பட்டது. மற்றொன்று ஸ்பைக் புரதத்தை உட்செலுத்துவதற்கு முன்பு மனித நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எலியிலிருந்து எடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஒரு தனி சோதனை குறித்த அறிக்கையை ரெஜெனெரான் இன்னும் வெளியிடவில்லை. ரெஜெனெரோனின் காக்டெய்ல், இன்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறப்பு 'விரிவாக்கப்பட்ட அணுகல்' பரிசீலனையின் கீழ் டிரம்பிற்கு இந்த மருந்தை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அனுமதிகள் அவசரகால சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
Remdesivir
அதிபர் டிரம்புக்கு Remdesivir என்ற வைரஸ் தடுப்பு மருந்தின் ஐந்து நாட்களுக்கான கோர்ஸ் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் JAMA என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டம் -3 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளின்படி, நிமோனியாவுடன் COVID-19 தொற்றால் மிதமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குணமடைவதில் இந்த மருந்து நல்ல பங்களிப்பை அளிக்கிறது என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் 600 நோயாளிகள் சோதிக்கப்பட்டனர். மேலும் ரெம்டெசிவிரின் ஐந்து நாள் கோர்சை எடுத்துக்கொண்டவர்கள், மற்ற நோயாளிகளை விட, 11 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் குணமடைந்தார்கள். இந்த ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்க FDA தனது 'அவசரகால பயன்பாடு' விதியின் கீழ் அனைத்து COVID-19 நோயாளிகளுக்கும் Remdesivir-ஐ பயன்படுத்த அங்கீகாரம் அளித்தது.
Dexamethasone
சுவாரஸ்யமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு (Donald Trump), சனிக்கிழமையன்று டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) என்ற பொதுவான கார்டிகோஸ்டீராய்ட் அளிக்கப்பட்டது. அவரது ஆக்ஸிஜன் அளவு தற்காலிகமாக குறைந்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், இந்த மருந்து அளிக்கப்பட்ட செய்திகளும் வெளிவந்தன. இந்த மருந்து, பொதுவாக, ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ள, வெண்ட்லேட்டரில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றது.
எனினும், இந்த மருந்து மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால், ஆரம்ப கட்டத்திலேயே இந்த மருந்து ஏன் டிரம்பிற்கு அளிக்கப்பட்டுள்ளது என பல விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர். சில வல்லுநர்கள் டெக்ஸாமெதாசோன் சித்தப்பிரமை, பரபரப்பு, மற்றும் சில சந்தர்ப்பங்களில், மனநோய் உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ALSO READ: மருத்துவமனைக்கு வெளியே காரில் பயணித்து, இன்ப ஷாக் கொடுத்த Donald Trump..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR