Ukraine crisis: அமெரிக்காவிடம் THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன்

உக்ரைன் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில், பால்டிக் நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தடுப்பாக மற்ற நேட்டோ துருப்புக்களின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2022, 10:41 AM IST
  • அமெரிக்காவிடம் உதவி கோரும் உக்ரைன்
  • THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு தேவை
  • உக்ரைனில் சூழும் போர்மேகம்
Ukraine crisis: அமெரிக்காவிடம்  THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன் title=

உக்ரைன் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில், பால்டிக் நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு தடுப்பாக மற்ற நேட்டோ துருப்புக்களின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளன. அமெரிக்காவிடம்  THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்புக்கான கோரிக்கையை உக்ரைன் முன்வைத்துள்ளது.

உக்ரைன் பிரதேசத்தில் கார்கோவ் அருகே ஏவுகணைகளை நிலைநிறுத்த உக்ரைன் விரும்புவதாக கூறப்படுகிறது. உக்ரைன் THAAD க்கான கோரிக்கையை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது. 

2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததைத் தொடர்ந்து, நேட்டோ, போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கு பன்னாட்டு பட்டாலியன்களின் "மேம்படுத்தப்பட்ட முன்னோக்கி இருப்பை" அனுப்பியது.

WORLD
இப்பகுதியில் பதற்றம் அதிகமாக இருப்பதால், எஸ்டோனிய வீரர்கள் ஒரு காட்டில் ஒளிந்து கொண்டிருப்பதையும், அருகிலுள்ள ஒரு பனி சமவெளியில் டாங்கிகளுடன் பதுங்கியிருப்பதையும் காண முடிந்தது.

ரஷ்யாவின் S-400 அமைப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு பல பணிகளைச் செய்ய முடியும், ஏனெனில் பல நாடுகள் அதன் பல்வேறு திறன்களால் வாங்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

S-400ஐ, ஒரு மொபைல் கட்டளை வாகனம் மூலம் 5 நிமிடங்களில் ஒன்றுசேர்க்க முடியும் என்று கூறப்படுகிறது, இது எந்த நிலப்பரப்பில் இருந்தும் சுடக்கூடிய சக்தி பெற்றது.

WORLD

இஸ்கந்தர்-எம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை
யாகும். உக்ரைன் எல்லைக்கு அருகே இஸ்கந்தர்-எம் குறுகிய தூர ஏவுகணை (SRBM) அமைப்புகளை ரஷ்யா நிறுத்தியுள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முக்கியம் வாய்ந்த செயலாக பார்க்கப்படுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட வீடியோவின்படி, ஐரோப்பாவின் எல்லையில் உள்ள மேற்கு இராணுவ மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயிற்சிகளில் இஸ்கந்தர் ஏவுகணை அமைப்புகள் பங்கேற்றுள்ளன.

WORLD

இந்த திட்டமிடப்பட்ட பயிற்சிகள் துருப்புக்களின் போர் தயார்நிலையை சரிபார்க்கும் நோக்கத்தில் இருந்தன என்பதும் குறிப்பிடத்தகக்கது.

ஐரோப்பாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உக்ரைன் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், அமெரிக்கா 8,500 துருப்புக்களை ஐரோப்பாவிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியதும் நினைவில் இருக்கலாம்.

WORLD

முன்னதாக, 2018 ஆம் ஆண்டில், கலினின்கிராட் வரை அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை ரஷ்யா அனுப்பியது. 

குறுகிய தூர இஸ்கந்தர் ஏவுகணைகள், 500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் என்பதும்,  வழக்கமான அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

ALSO READ | ஆபாச தள கண்காணிப்பிற்கு இனி கிரெடிட் கார்டு விவரங்கள் உதவும்

ALSO READ | இந்த நாடுகளில் மட்டும் மனிதர்கள் நூறாண்டு வாழும் ரகசியம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News