அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் உள்ள, பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய நபர் நேற்று முந்தினம் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பேட்டன் ஜென்ட்ரான் என்ற 18 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவர் 13 பேரைத் தாக்கிய நிலையில் அதில் 11 பேர் கருப்பினத்தவர் ஆவர்.
பேட்டன் ஜென்ட்ரானிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் கைதான நபர் கருப்பர்கள், யூதர்கள், முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரிப்பதால் வெள்ளையர்களின் எண்ணிக்கை குறைவதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
இந்த இனவெறி கருத்துகளால் பாதிக்கப்பட்ட பேட்டன் ஜெண்ட்ரான், கருப்பினத்தவர்களைக் கொல்வதற்காக 180 பக்க அறிக்கை தயாரித்ததோடு, முடிந்தவரை பல கருப்பர்களைக் கொல்வதே தனது இலக்கு எனவும் அதில் கூறியுள்ளார். ஜென்ட்ரான் நியூயார்க் மாகாணத்தின் புறநகரில் வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் நடந்த அன்று, கருப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு செல்வதற்காக சுமார் 320 கி.மீ. தூரம் கார் ஓட்டி வந்த அவர், வார இறுதி நாள் என்பதால் பல்பொருள் அங்காடியில் அதிக மக்கள் இருப்பார்கள் என்பதைத் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும், தாக்குதல் நடத்துவது குறித்து துல்லியமாக திட்டமிட்டிருந்த அவர், தலைக்கவசம் அணிந்தபடி அதனை நேரலையில் ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கின்போது வீட்டில் இருந்த சமயத்தில் இணையம் வழியாக இனவெறியைத் தூண்டும் விதமான வலைதளங்களை அதிக அளவில் பேட்டன் ஜெண்ட்ரான் பின்பற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், மனநல ஆலோசனை பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | Racism: கிரிக்கெட்டில் இனவெறி அதிகரிக்கிறதா? பரபரப்பு சர்ச்சை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR