அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
வடகொரியாவால் கைது செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வாரம்பியர் உயிரிழந்தார்.
வடகொரியாவில் சித்ரவதைச் செய்யப்பட்டதால் தான் மாணவர் மரணமடைந்தார் எனா அமெரிக்க கூறியது. இந்நிலையில், வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித்தாளில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:- “ அமெரிக்க அதிபர் கடினமான சூழ்நிலையில் உள்ளார். எனவே மக்களை திசைத் திருப்ப வடகொரியா மீது முன் தவிர்ப்புத் தாக்குதலை நடத்தி விடலாம் என்ற யோசனையுடன் அமெரிக்கா விளையாடி வருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட ட்ரம்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் தென் கொரியாவுக்கு பேரழிவு ஏற்படும் என்பதை அந்நாடு உணர வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.