போலந்து ஏவுகணை தாக்குதல்: ரஷ்யாவை சாடிய ஜெலன்ஸ்கியின் வாயை அடைத்த அமெரிக்கா

Poland Missile Attack: போலந்து ஏவுகணைத் தாக்குதலுக்கு ரஷ்யாவை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கியின் வாயை அடைத்தது அமெரிக்காவின் முதற்கட்ட விசாரணை! நடந்தது என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 16, 2022, 04:47 PM IST
  • ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் இனி அசாத்தியமா?
  • போலந்து ஏவுகணைத் தாக்குதலுக்கு ரஷ்யாவை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி
  • உக்ரைனின் வாயை அடைத்தது அமெரிக்கா
போலந்து ஏவுகணை தாக்குதல்: ரஷ்யாவை சாடிய ஜெலன்ஸ்கியின் வாயை அடைத்த அமெரிக்கா title=

போலந்து மீதான ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக, தற்போது உக்ரைன் சிக்கலில் சிக்கும் என்று தெரிகிறது. நேற்று, போலந்து நாட்டில் விழுந்த ஏவுகணையை ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது என்று முதலில் அனைவரும் கருதிய நிலையில், ரஷ்ய ஏவுகணைக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என்று அமெரிக்காவின் ஆரம்பக்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

போலந்து ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்கா: ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே, போலந்தில் ஏவுகணை வீழ்ந்ததை அடுத்து, உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது. நேட்டோ உறுப்பு நாடுகள் முகம் சுளித்தன. உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை கடுமையாக குற்றம் சாட்டினார்.

ஆனால், போலாந்து நாட்டை தாக்கிய ஏவுகணை, உக்ரைன் இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என்று அமெரிக்காவின் ஆரம்பக்கட்ட விசாரணை தெரிவித்திருப்பதால் உக்ரேனிய அதிபர் ஜெலன்சிக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 15 செவ்வாய்), உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்யாவிலிருந்து 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன.

மேலும் படிக்க |  உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேறவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

இரண்டு பேர் பலி

உக்ரைன் எல்லைக்கு அருகே போலந்தில் இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதன் காரணமாக பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தி பரவியதால், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

நேட்டோ நாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. போலந்தும் எல்லையில் ராணுவத்தை நிறுத்தியது. போலந்தில் விழுந்த ஏவுகணைகள் தங்களுடையவை அல்ல என்று ரஷ்யா ஏற்கனவே மறுத்திருந்தாலும். போலந்து மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும், 'ஆத்திரமூட்டும் வகையில்' இருப்பதாகவும் கூறிய மாஸ்கோ, தங்கள் மீதான காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் கூறியது.

அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யாவிடம் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, போலந்தில் செவ்வாய்கிழமை வெடித்த ஏவுகணை ரஷ்யாவின் தரப்பில் இருந்து ஏவப்படவில்லை. தற்போது அமெரிக்க அதிகாரிகளும் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அந்த ஏவுகணைகள் ரஷ்யாவை சேர்ந்தவை அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் படிக்க | அமைதி பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் காட்டும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

ஜெலென்ஸ்கி புடினை தாக்கினார்

போலந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புடின் மற்றும் ரஷ்யா மீது கடுமையாகக் குற்றம் சாட்டினார். போலந்து மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டிய அவர், ரஷ்யாவின் பயங்கரவாதம் தனது எல்லையில் மட்டும் இருக்காது என்று உக்ரைன் ஏற்கனவே எச்சரித்துள்ளது என்று தெரிவித்தார்.

இன்று ரஷ்ய ஏவுகணைகள் அண்டை நாடான போலந்தை தாக்கின. மக்கள் கொல்லப்பட்டனர். இதற்காக நான் வருந்துகிறேன் என்று தெரிவித்த உக்ரைன் அதிபர், 'ரஷ்யா எவ்வளவு காலம் உக்ரைன் மீதான தாக்குதலை நடத்துகிறதோ, அதுவரை யாருக்கும் எதிராக ரஷ்ய ஏவுகணைகள் அனுப்பப்படும் அபாயம் அதிகம். நேட்டோ எல்லைக்குள் ஏவுகணைகளை வீசுவது என்பது, கூட்டுப் பாதுகாப்பு மீதான ரஷ்ய தாக்குதலாகும். இது மிகப் பெரிய நிகழ்வு. நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், முதற்கட்ட விசாரணையில், ஏவப்பட்டது உக்ரைன் தரப்பு பதில் ஏவுகணை என்பதால் உக்ரைன் அதிபர் சொன்ன வார்த்தைகள், அவருக்கே பூமரங்காக திரும்புகிறது.

மேலும் படிக்க | அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News