புது தில்லி: கடந்த 3 ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி விமான தாக்குதலில் (American Airstrike) ஈரான் புரட்சிகர காவல்படையின் உயர் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி (Qassem Soleimani) கொல்லப்பட்ட அதே நாளில் மற்றொரு மூத்த ஈரானிய தளபதியை கொல்லவும் அமெரிக்க இராணுவம் முயன்றது, ஆனால் தோல்வியடைந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் (US officials) நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தனர்.
அதாவது ஈரானின் இஸ்லாமிய குடியரசுக் காவலர் படையணியின் உயர்மட்ட தளபதியான அப்துல் ரெசா ஷாஹ்லாயை (Abdul Reza Shahlai) குறிவைத்து இராணுவ வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதில் அப்துல் ஷாஹ்லா தாக்குதல் வெற்றி பெறவில்லை என அதிகாரிகள் கூறினார்.
ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் அப்துல் ஷாஹ்லாய் இருவரும் இராணுவ இலக்கு பட்டியல்களில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஈரானின் குட்ஸ் படையின் தலைமையை முடக்குவதற்கு அமெரிக்கா வேண்டுமென்றே மேற்கொண்ட முயற்சியைக் குறிக்கிறது.
ஜனவரி 3 ம் தேதி அமெரிக்க ட்ரோன் தாக்குதல் சுலைமானி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே கொல்லப்பட்டார். ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் இந்த கொலையை தற்காப்பு நடவடிக்கை என்று நியாயப்படுத்தி உள்ளனர். மேலும் மத்திய கிழக்கில் ஏராளமான அமெரிக்க இராணுவ மற்றும் அதிகாரிகளை எதிராக அச்சுறுத்தும் விதமாக இராணுவ நடவடிக்கைகளை அவர் (காசிம் சுலைமானி) திட்டமிடுவதாகக் கூறினர்.
ஆனாலும் ஈரான் இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என்று கூறியது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 8 ஆம் தேதி ஈராக்கில் இரண்டு தளங்களில் ஒரு டஜன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி படைகளை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஆனால் அதில் யாரும் கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.