தங்கைக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? கருப்பையை தானமாக கொடுத்த அக்காவின் அன்பு

Uterus Transplant: கருவுறுதல் சிகிச்சையில் ஒரு மைல்கல்லாக, இங்கிலாந்தில் முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 23, 2023, 10:07 PM IST
  • கருவுறுதல் சிகிச்சையில் மைல்கல்
  • இங்கிலாந்தில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
  • கருப்பை மாற்று அறுவை சிகிச்சை
தங்கைக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? கருப்பையை தானமாக கொடுத்த அக்காவின் அன்பு title=

லண்டன்: யுனைடெட் கிங்டமில், கருவுறுதல் சிகிச்சையில், மிகப்பெரிய மைல்கல் என்றும், "மகத்தான வெற்றி" என்றும் புகழப்படும் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர். ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பெற்ற 40 வயதுடைய பெண் ஒருவர், தனது 34 வயது சகோதரிக்கு தனது கர்ப்பப்பையை தானம் செய்து உதவியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருப்பை தானம் பெற்ற பெண், பிறக்கும்போதே, கருப்பை இல்லாமல் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளுக்கு நடைபெற்ற இந்த அபூர்வ உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு இருவரும் பரிபூர்ண நலம் பெற்று ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | கர்ப்பப்பை அகற்றம் குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

கருப்பைப் பெற்ற இளைய சகோதரியும் அவரது கணவரும், கருப்பையில், கருக்கள் மாற்றப்படுவதற்காக காத்திருக்கிறார்கள். கருப்பை தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சகோதரிகள் இருவருக்கும் அறுவைசிகிச்சைகள் ஆறு மாதங்களுக்கு முன்னதாக, அதாவது 2023 பிப்ரவரியில் நடந்தது. இந்த அறுவைச் சிகிச்சையை 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்தினார்கள். லண்டன் சர்ச்சில் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சுமார் 17 மணி நேரம் நீடித்தது.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பது இவ்வளவு சுலபமா? கிச்சன் கில்லாடி மசாலாக்கள் இருக்கே!

இதுபோன்ற கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை இங்கிலாந்தில் முதல் முறையாக நடைபெற்றது. ஆனால் ஸ்வீடன், அமெரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, சீனா, செக் குடியரசு, பிரேசில், ஜெர்மனி,செர்பியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 90க்கும் மேற்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

கருப்பை தானம் பெற்றுக் கொண்ட பெண், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனைகளின் ஒரு பகுதியான ஆக்ஸ்போர்டு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் ஆலோசகர் அறுவை சிகிச்சை நிபுணரான இசபெல் குய்ரோகா, நோயாளி கூறினார்.

"கருப்பை பொருத்திக் கொண்ட பெண், சந்திரனை தொட்ட ஆம்ஸ்ட்ராங் போல சந்தோஷமாக இருக்கிறார். ஒன்றல்ல இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறாள். அவளது கருப்பை சரியாக இயங்குகிறது, மேலும் அவளது முன்னேற்றத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற அறிவியல் முன்னேற்றங்களும், அறுவை சிகிச்சைகளும், மருத்துவ உலகில் மைல்கல் என்றால் மிகையாகாது.

மேலும் படிக்க | பெண்களின் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த வைட்டமின் தேவை! எஃகு போன்ற எலும்புக்கு ஆதாரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News