உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது: ரஷ்யா

இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் Zee மீடியாவுக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறது என கூறினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 5, 2022, 03:05 PM IST
  • ரஷ்ய இராணுவம் மெதுவாக முன்னேறி வருகிறது.
  • உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறது.
  • மேற்கத்திய ஊடகங்கள் மூலம் பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது: ரஷ்யா title=

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடனும், ரஷ்ய ராணுவத்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறிய ரோமன் பாபுஷ்கின், உக்ரைன் இந்திய மாணவர்களை துன்புறுத்துவதாக சாட்டியதுடன், உக்ரைனில் உள்ள ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றார்.

இந்திய மாணவர் மரணம் வருத்தமளிக்கிறது

தூதர் ரோமன் பாபுஷ்கின், Zee மீடியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்திய மாணவியின் மரணம் மிகவும் வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்திய மாணவர் எந்த சூழ்நிலையில் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்களை குறிவைக்கவில்லை, அதனால்தான் எங்கள் இராணுவம் மெதுவாக முன்னேறி வருகிறது என்றார்.

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ஆனால் உக்ரைன் ராணுவத்தினர் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன

மேற்கத்திய ஊடகங்கள் மூலம் பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார். ரஷ்ய வீரர்கள் அணுமின் நிலையத்தை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது, இது முற்றிலும் தவறானது. உக்ரேனிய ராணுவத்தினர் அணுமின் நிலையத்தில் கூடி ரஷ்ய இராணுவத்தை தாக்கினர். ரஷ்ய துருப்புக்கள் பதிலடி கொடுத்த பிறகு அவர் நிலையத்திலிருந்து தப்பி ஓடினார், ஆனால் அவர் செல்லும் போது ஒரு அணு உலைக்கு தீ வைத்தார். அணுமின் நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. ரஷ்ய இராணுவம் தொலைக்காட்சி கோபுரத்தைத் தாக்கியது. ஆனால் மக்கள் இறக்கக்கூடாது என்பதற்காக து குறித்த முன் எச்சரிக்கை ஏற்கனவே கொடுக்கப்பட்டது.

ரஷ்ய-விரோத நாஜி அரசாங்கம் டான்பாஸில் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களைக் கொன்றது. ஆனால் மேற்கு நாடுகள் அது பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. அதனால், நேட்டோ இப்போது கிழக்கு நோக்கி நகர்வதால் ரஷ்யாவிற்கு அதன் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் தேவை. ரஷ்யா உக்ரைனின் இராணுவமயமாக்கலை மட்டுமே விரும்புகிறது. இப்போது மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றன.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

பொருளாதாரத் தடைகளைப் பற்றி கூறிய பாபுஷ்கின் ரஷ்யா இதற்கு முன்பு இதுபோன்ற தடைகளை எதிர்கொண்டது. அதனை சூழ்நிலைகளுக்குப் ஏற்ப கையாண்டது. ஆனால் பொருளாதார நடவடிக்கைகளை தவிர்த்து விட்டு, ரஷ்ய கலைஞர்கள், வீரர்கள் மற்றும் விமான நிறுவனங்களை தடை செய்வது மேற்கத்திய நாடுகளின் உள்நோக்கத்தை காட்டுகிறது என்றார்.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News