ஜப்பானின் சுனாமி: புத்தாண்டின் முதல் நாளான இன்று, ஜப்பானில் பெரிய பூகம்பத்திற்குப் பிறகு முதல் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கின, ஆழிப்பேரலை மிக பிரம்மாண்டமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. ஜப்பானில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கியது. ஜப்பான் கடலின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் சுனாமி ஏற்பட்டது, மேலும் பெரிய அலை எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜப்பானின் செய்தி ஊடகம் NHK தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது வெறும் நில அதிர்வாக மட்டுமல்ல, புத்தாண்டு சோகமாக விடிந்தது என்ற சோகத்தையும் சுமந்து வந்த அதிர்வாகவே இருந்தது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கின.
WHAT A SAD START TO NEW YEAR 2024.#japanese #japannews #japan #earthquackes #Tsunami #NewYear2024#Japan pic.twitter.com/kvwEDBEAVW
— World History official (@historywlord) January 1, 2024
ஜப்பான் கடலின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் சுனாமி ஏற்பட்டது, மேலும் பெரிய அலைகள் நிலப்பரப்பை தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது தொடர்பாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஏஜென்சியின் கணிப்பின்படி, இஷிகாவா மாகாணத்தில் உள்ள ஹசூ மாவட்டத்தில் அமைந்துள்ள நோட்டோ நகரத்தில் 5 மீட்டர் உயர சுனாமி எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு முதல் நாளான இன்று 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு மத்திய ஜப்பானைத் தாக்கியது.
வானிலை ஏஜென்சி வெளியிட்ட தகவல்களின் படி, 5 மீட்டர் உயரமுள்ள சுனாமி இஷிகாவா மாகாணத்தில் நோட்டோவை தாக்கலாம். ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அலைகள் தாக்கிய நிலையில், மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேபோல, Hokuriku Electric Power என்ற அமைப்பு, தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை சரிபார்த்து வருவதாக ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்ற மாதம் (2023டிசம்பர் 3) , பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டானாவ் தீவை மையமாகக் கொண்டு சுமார் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ