நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்... அமெரிக்காவில் பரபரப்பு!

டிரம்பிற்கு எதிராக தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 5, 2023, 06:22 AM IST
  • நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.
  • குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
  • பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலம் டிரம்ப் தனது கருத்தை தெரிவிக்கலாம்.
நீதிமன்றத்தில் சரணடைந்தார்  டிரம்ப்... அமெரிக்காவில் பரபரப்பு! title=

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் சரண்டைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, அவருக்கு ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து இவ்விவகாரத்தை மூடி மறைக்க அவருக்கு ரூ.1.07 கோடி பணம் ட்ரம்ப் மூலம் வழங்கப்பட்டது என்றும்,  ஆனால் இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கில் காட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது.அமெரிக்காவில் பொய்யாக வணிக  செலவை காட்டுவது சட்ட விரோதமாக உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் சரண்டைந்தார். 

இந்நிலையில், டிரம்பிற்கு எதிராக தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கில் இன்று முன்னாள் அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதையடுத்து, தொடர்ந்து டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் போலீசார் கைது செய்தனர். எனினும் அவருக்கு கை விலங்கு போடப்படவில்லை. தொடர்ந்து நீதிபதி முன்பாக டொனால்டு டிரம்ப் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளை அவரிடம் எடுத்துக் கூறிய நீதிபதி, அவருக்கு இருக்கும் உரிமைகளையும் விளக்கினார். அப்போது டிரம்ப் தான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை வாதிட்டார். தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் நீதிமன்ற அறையில் இருந்த டொனால்டு டிரம்ப் மிகவும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச்சாட்டு பதிவு நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.

மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!

நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல், பாதுகாப்பு வீரர்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க டொனால்டு டிரம்ப் தனது காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் புளோரிடா மாகாணத்திற்கு தனக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் புறப்பட்டு செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றம் வழக்கு தொடர்பாக கருத்து கூறக்கூடாது என கட்டுப்பாட்டு எதையும் டொனால்டு டிரம்பிற்கு வ விதிக்கவில்லை என்பதால், விரைவில் அறிக்கை அல்லது பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலம் டிரம்ப் தனது கருத்தை தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | நான் திரும்பி வந்து விட்டேன்... முகநூலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News