ஹெச்-1பி விசாவால் மேலும் இந்தியர்களுக்கு நெருக்கடி!

எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது!

Last Updated : Apr 24, 2018, 09:06 PM IST
ஹெச்-1பி விசாவால் மேலும் இந்தியர்களுக்கு நெருக்கடி! title=

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹெச்-1பி விசா பெற்றவர்களின், கணவன் அல்லது மனைவி, அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்பட்டு வந்த சலுகையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ட்ரம்ப் அதிபரான பின், அமெரிக்காவில் குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டன. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் பொருட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். முன்னதாக, இந்தியர்கள் மற்றும் சீனர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வந்த ஹெச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தார்.

தற்போது, ஹெச்-1பி விசா பெற்றவர்களின் துணைவர்கள், அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்பட்டு வந்த, ஒர்க் பெர்மிட் சலுகையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளாராம். முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் இந்த சலுகை அமல்படுத்தப்பட்டது. இதை ரத்து செய்வதால், இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இதை பயன்படுத்தி வரும் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 

"புதிதாக கொண்டு வரப்படவுள்ள விதிமுறை மாற்றங்களில், H-4 பிரிவுக்குள் வரும் துணைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலைக்கான சலுகையை திரும்பபெற திட்டமிட்டுள்ளோம்" என அமெரிக்க குடியுரிமைத் துறை தலைவர் பிரான்சிஸ் சிஸ்னா, நாடாளுமன்ற மேல் சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த அதிகார்பூர்வை அறிவித்து விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Trending News