திரிகோணமலை எண்ணெய் பண்ணை ஒப்பந்தம்; ‘சீன விரிகுடாவில்’ கால் பதிக்கும் இந்தியா..!!!

இலங்கையின் ‘சீன விரிகுடா’வுக்குள் நுழைவதற்கு, இலங்கையுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த இந்தியா நீண்ட காலம் முயற்சி செய்து வரும் வேளையில், தற்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 29, 2021, 04:40 PM IST
திரிகோணமலை எண்ணெய் பண்ணை ஒப்பந்தம்; ‘சீன விரிகுடாவில்’ கால் பதிக்கும் இந்தியா..!!! title=

இலங்கைக்கு சீனா, கடனை வாரி வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் வடகிழக்கு திருகோணமலை மாகாணத்தில் எண்ணெய் தொட்டிகள் நிறைந்த பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தாக உள்ளது.

இலங்கையின் ‘சீன விரிகுடா’வுக்குள் நுழைவதற்கு, இலங்கையுடன் ஒப்பந்ததை ஏற்படுத்த இந்தியா நீண்ட காலம் முயற்சி செய்து வரும் வேளையில், தற்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் உறவை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தீங்கு விளைவிக்கும் பாக்ட்ரீயாக்கள் நிறைந்த உரங்களை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது நிலையில், உரங்களை ஏற்றி வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்தது தொடர்பாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது குறித்து தெரிவிக்கையில், 16 மாதங்களுக்குப் பிறகு புதுதில்லியும் கொழும்பும் திட்டத்தின் விதிமுறைகளை இறுதி செய்ய நெருங்கிவிட்டதாக தெரிவித்தார்.

ALSO READ | கொரோனா அல்ல; வேறுகிரக வாசிகளால் தான் பிரச்சனை: வடக்கு அயர்லாந்து மக்கள்

“விடுமுறை காரணமாக இந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடக்கவில்லை. அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” என கம்மன்பில கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சீனா விரிகுடா'வில் அமைந்துள்ள திருகோணமலை எண்ணெய் டாங்க் பண்ணை, இரண்டாம் உலகப் போரின் போது எரிபொருள் நிரப்பும் நிலையமாக பிரிட்டனால் கட்டப்பட்டது.

ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான எண்ணெய் தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என்ற நிலையில், அவை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைக்க மில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகும்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, திருகோணமலை எண்ணெய் பண்ணையில், தலா 12,000 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 99 சேமிப்பு தொட்டிகள் உள்ளது. அங்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான LIOC நிறுவனத்திடம் தற்போது 15 தொட்டிகள் உள்ளன. புதிய ஒப்பந்தம் மீதமுள்ள தொட்டிகள் தொடர்பானது.

இந்த ஒப்பந்தம் 1987 இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், இதன் மூலம் தொட்டியை புதுப்பிக்கும் பணியை இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக, உள்ளூர் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் போராடி வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் ஒருபோதும் நிறைவேறவில்லை.

இலங்கை தமிழர்களை பகடையாக்கி, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா சதி திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் வந்த நிலையிலும், இந்த ஒப்பந்தம் குறித்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

ALSO READ | உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கிய சீனா..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News