ஜம்மு காஷ்மீர்: மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்

Last Updated : Aug 5, 2017, 11:19 AM IST
ஜம்மு காஷ்மீர்: மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் title=

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சப்போர் பகுதியில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் கூறுகையில், சோபூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் இந்த என்கவுண்டர் மூடப்பட்டுள்ளன. இணைய சேவைகளும் வட காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில்  துண்டிக்கப்பட்டுள்ளன.

ஏ.என்.ஐ அறிக்கையின் படி, இந்த என்கவுண்டர் ஆனது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) -இன் 179 பட்டாலியன், 52 ராஷ்டிரீ ரைஃபிள்ஸ், ஜம்மு காஷ்மீர் போலீசின் சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்.ஒ.ஜி) கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பல பயங்கரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு துஜானா உள்பட அனைவரயும் பிடிக்க இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News