சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் உடல் எடைகுறைப்பு சிகிச்சை செய்துகொண்ட ’எமான் அகமது’ அபுதாபி மருத்துவமனையில் காலமானார்!
எகிப்து நாட்டின் கெய்ரோ பகுதியை சேர்ந்தவர் எமான் அகமது(37). உலகின் மிகவும் குண்டான பெண்ணாக கருதப்படுபவர். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 11–ஆம் தேதி உடல் எடைகுறைப்பு சிகிச்சைக்காக மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டார். அச்சிகிச்சையில் 504 கிலோவில் இருந்து 242 கிலோவிற்கு அவரது எடை குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் எமானின் சகோதரி சாய்மா சலீம் சிகிச்சை குறித்து புகார் அளிக்க, எமிரெட்ஸில் உள்ள புருஜீல் மருத்துவமனை டாக்டர்கள் எமான் அகமது-வை எமிரெட்ஸ் கொண்டுச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தனர்.
பின்னர் கடந்த மே 4-ம் தேதி அவர் மும்பையில் இருந்து எமிரெட்ஸ் சென்று சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக தகவல்கள் வெளியான நிலையினில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதயத்தில் பிரச்சனை மற்றும் சிறுநீரகம் செயல்படு பிரச்சனைப் போன்ற காரணங்களால் அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.