அண்டை நாடுகளை குறிவைக்கும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
தனது வழக்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:- அண்டை நாடுகளை குறிவைக்கும் பயங்கரவாத இயக்கங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் வழங்குவதை அவர்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுப்பதை பார்க்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் தீவிரவாத குழுக்கள் அண்டை நாடுகளை மட்டுமே அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. எனவே, தங்கள் மண்ணில் உள்ள அனைத்து தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.