இலங்கையில் உள்ள ஹம்பண்டோடா துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் லீசுக்கு விடப்பட்டுள்ளது. இது சுமார் 1.1 பில்லியன் டாலர்(ரூ.6500 கோடி) மதிப்பீட்டில் இதற்கான ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது.
இதையடுத்து, இலங்கை அரசு ரூ.300 மில்லியன் டாலர் தொகையை பெற்றுக் கொண்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றிருந்த போது இந்த ஒப்பந்தம் குறித்து சீன அரசிடம் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து, இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அரசின் அரசிதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் பொருளாதார மண்டலமும், தொழில்பேட்டையும் அமையும் என்று விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
சீன நிறுவனத்திற்கு இலங்கை அரசு நிறைய வரிச்சலுகைகள் வழங்கியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.