தாய்லாந்தில் சுற்றுலாப்படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது!
தாய்லாந்தில், 93 சுற்றுலாப்பயணிகள், 11 பணியாளர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி உட்பட மொத்தம் 105 பேர் படகு ஒன்றில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் படகில் பயணம் செய்த அனைவரும் நீருக்குள் மூழ்கினர்.
இதையடுத்து, விபத்துப் பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர், 21 பேரை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்டதில் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், படகில் பயணித்த அனைவரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், தற்போதுவரை பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், காணாமல் போன 23 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் தாய்லாந்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பேரிழப்பான இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.