Coronavirus: HIV மருந்துகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் குணப்படுத்தலாம்

உலக முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசை எச்.ஐ.வி மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்தப்பட்டதாக தாய்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2020, 12:23 PM IST
Coronavirus: HIV மருந்துகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் குணப்படுத்தலாம் title=

தாய்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு மெர்ஸ் கொள்ளை நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தையும் எச்.ஐ.வி மருந்துகளை சரிவிகிதத்தில் பயன்படுத்தி வழங்குவதன் மூலம் கொடிய கொரோனா வைரஸை குணப்படுத்த ஒரு மருந்தைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார். இறப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகமான நாடுகள் பயணத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதால், 17,000 க்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கொடிய தொற்று நோய் காரணமாக உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து கூறிய தாய்லாந்து மருத்துவர்கள், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் தங்கள் வெற்றி பெற்றதாகவும், அந்த இரண்டு மருந்துகளையும் சரிவிகிதங்களில் கலந்து பயன்படுத்தினோம். அடுத்த 48 மணி நேரத்தில் நோயாளிகளின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது என்றும் மருத்துவர்கள் கூறினார்.

தாய்லாந்தின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாங்காக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் மருந்துகளின் கலவையை வழங்கிய பின்னர், பெரும்பாலும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. அதாவது காய்ச்சல் மருந்து மற்றும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து இரண்டும் சேர்ந்து கொடுக்கப்பட்டது. இதன்மூலம் நோயாளிகள் சீக்கிரமாக குணமாகுவது கண்டறியப்பட்டது. ஆனால்  ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் இந்த சிகிச்சை முறையை பரிந்துரைப்பது குறித்து அவசரம் காட்ட முடியாது எனவும் கூறப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 71 வயதான நோயாளி பரிசோதிக்கப்பட்டார். காம்பினேஷன் மருந்துகளின் முதல் டோஸ் அவருக்கு வழங்கப்பட்டு கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு, அவரது உடலில் முன்னேற்றம் காணப்பட்டது. இந்த செய்தி உண்மையாக இருந்தால், கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்க இது மிகவும் திருப்புமுனையாக இருக்கலாம். 

இந்த நோய் இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இன்றுவரை, வைரஸ் காரணமாக மொத்தம் 362 பேர் உயிர் இழந்துள்ளனர். நம் நாட்டை பொறுத்த வரை கேரளாவில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு அதற்கான தேவையான சிகிச்சையை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News