அமெரிக்காவின் வலியை அதிகரிக்க தலிபானின் புதிய திட்டம்; 9/11 தேதியில் பதவி ஏற்பு

Taliban Govt Inauguration: ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் 9/11 இன் 20 வது ஆண்டு விழாவில் பதவியேற்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2021, 08:14 AM IST
அமெரிக்காவின் வலியை அதிகரிக்க தலிபானின் புதிய திட்டம்; 9/11 தேதியில் பதவி ஏற்பு title=

காபூல்: அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 11ம் தேதியாகும். கடந்த 2001ம் ஆண்டு இந்தமோசமான சம்பவம் நடந்தது. அதன்படி தற்போது அதே நாளில் தாலிபன்களின் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக உண்மையா என தெரியவில்லை.

செப்டம்பர் 11 அமெரிக்காவிற்கு சவால்?
செப்டம்பர் 11-ம் தேதி இந்த தேதி வல்லரசு அமெரிக்காவிற்கு ஒரு சவாலாகும், ஏனென்றால் இந்த நாளில் தாலிபான் (Taliban) அரசாங்கத்தின் பதவியேற்பு அமெரிக்காவிற்கு ஒரு காயமாக இருக்கலாம். 2001 ஆம் ஆண்டு இந்த நாளில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் (WTO) இரட்டை கோபுரங்கள் மீது பயங்கர பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது, இந்த நாளில் தாலிபான் அரசு அமைப்பது அமெரிக்காவிற்கு நேரடி சவாலாக உள்ளது.

ALSO READ | Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்

பதவியேற்பு விழாவிற்கு இந்த நாடுகளுக்கு அழைப்பு
தகவல்களின்படி, இந்தியா, அமெரிக்கா தவிர தாலிபன்கள் புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் நாட்டு அரசு தலைவர்களை அழைத்துள்ளனர். ஆனால் எப்போது பதவியேற்பு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாளான செப்டம்பர் 11ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சர்கள் யார் யார்
இதனிடையே முல்லா அப்துஸ் சலாம் இரண்டாவது துணை பிரதமர்களாக பொறுப்பேற்கிறார். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, வெளியுறவு அமைச்சராக ஆமீர் கான் முத்தாகி. ஆப்கான் (Afghanistan) இடைக்கால அரசின் துணை வெளியுறவு அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் (இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்), ஆப்கான் இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

ஆப்கன் புதிய பிரதமர்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபன்கள் முடிவு செய்துள்ளனர். 'முல்லா முகமது ஹசன் அகுந்த்' ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார், மேலும் தாலிபன்கள் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் அரசின் துணை தலைவராகவும் (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளார்.

ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News