ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறி வரும் நிலையில் அங்கு தாலிபான்களில் கை ஓங்கியுள்ளது. தாலிபன்கள் அந்தநாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.
நாட்டிலுள்ள 34 மாகாண தலைநகரங்களில் 12 மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரை கைப்பற்றியுள்ள தலிபான்கள் விரைவில் ஆப்கானின் தலைநகரமான காபூலை விரைவில் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சுமார் 70% நிலப்பரப்பு தலிபான் பயங்கரவாதிகள் வசம் சென்றுவிட்டது.
நாளுக்கு நாள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்து வருவதால் அங்கு உள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயறிச்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியை முடிக்கிவிட்டுள்ளது.
ALSO READ | காபூலை நோக்கி முன்னேறும் தாலிபான்; இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
இந்நிலையில் தாலிபான் செய்தி தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாஹீன் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா சார்பில் ஆப்கான் மக்களுக்கு கட்டப்பட்ட அணை உள்ளிட்ட பல்வேறு தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களை பாராட்டுவதாகவும், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த மாட்டோம்
மேலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் தாலிபான்கள் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை
இந்திய தூதுக்குழு தாலிபான் தூதுக்குழுவை சந்தித்ததாக வெளிவரும் செய்தியில் உண்மையில்லை என்று கூறிய அவர்,ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஆப்கானிஸ்தானின் 4 வது பெரிய நகரமான மத்திய ஆசிய நாடுகளின் எல்லையான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-e-Sharif) உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்தியா விரைவில் தனது இராஜீய அதிகாரிகளை தயாகம் அழைத்து வர நடவடிக்கை எடுத்தது.
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரில் இருந்து இந்தியா தனது தூதர்களை தாயகம் திரும்ப அழைத்து வந்த சில நாட்களுக்குப் பிறகு, மசார்-இ-ஷெரீப்பில் இருந்து இந்தியர்களை தாயகம் திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.
ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR