இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று இரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை விரவில் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சக பொறுப்புகளை பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆட்சியை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில், அமைச்சக பொறுப்புக்களை ஏற்க வேண்டாம் என தாங்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக அதிபரிடம் அறிவித்துள்ளனர்.
பதவி காலம் முடியும் வரை தாம் பதவியில் நீடிப்பதாகவும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய ஆட்சியை அமைக்க எதிர்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், எதிர்கட்சியினர் ஆட்சி அமைக்க முன்வராததால் தான், புதிய அமைச்சரவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அதிபர் இதன்போது தெரிவித்தார்.
வாஷிங்டனில் எதிர்வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை திட்டமிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தினுடான ஆரம்ப பேச்சுவார்த்தைகளுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று இலங்கையில் இருந்து காலை புறப்படவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குவார் என கூறப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தைக்கான குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களும் இன்று அமெரிக்கா புறப்பாடுவார்கள்.
இவர்கள் வாஷிங்டன் நகரில் 5 நாட்கள் தங்கியிருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR