இலங்கை தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், வருவாய் இழந்துள்ள ஹோட்டல்களுக்கு வேண்டிய நிதியுதவிகளை வழங்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவு பிரப்பித்துள்ளார்!
இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயனிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30% சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதத்தில் 50% வரையில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பு சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி விபுல குணதிலக தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10% பயண சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் வரவை மையாமாக கொண்டு இயங்கி வரும் நட்சத்திர விடுதிகள், சத்திரங்கள் பெரும் அளவு இழப்பு சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், வருவாய் இழந்துள்ள ஹோட்டல்களுக்கு வேண்டிய நிதியுதவிகளை வழங்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவு பிரப்பித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் அந்நாட்டின் பொருளாதாரத்தில் 5% ஆகும். இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்., கடந்த ஆண்டு மட்டும் 4,50,000 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலால் அந்த நிலை கேள்விக்குரியாகியுள்ளது.