சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு படைகளும் சிக்கிம் எல்லை தங்கள் படைகளை குவித்து உள்ளது. இதனால், இந்திய மற்றும் சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் ஏராளமான தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா செல்லும் தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, “ சீன பயணிகள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். தேவையில்லாமல் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். இது எச்சரிக்கை அல்ல. அறிவுரை மட்டுமே ஆகும்” என அறிவுறுத்தியுள்ளது.