பள்ளியில் துப்பாக்கிச்சூடு : குழந்தைகளும் பலி... 13 பேர் உயிரிழப்பு? - ரஷ்யாவில் கொடூரம்

ரஷ்யாவின் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2022, 04:22 PM IST
  • துப்பாக்கிச்சூட்டில் 5 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்
  • 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்
  • துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு : குழந்தைகளும் பலி... 13 பேர் உயிரிழப்பு? - ரஷ்யாவில் கொடூரம் title=

மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனிநபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பாதுகாவலர்கள், 2 ஆசிரியர்கள், 5 குழந்தைகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சம்பவ இடத்திலேயே தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முகமுடி அணிந்து, நாஜி சின்னத்துடன் இருந்ததாகவும், அவரிடம் வேறு எந்த அடையாள அட்டைகளும் இல்லை எனவும் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | நீடிக்கும் உக்ரைன் யுத்தம்; ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு!

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவக்குழுவினரும் அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பலரையும் மருத்துவமனைளுக்கு கொண்டு சென்றனர். சுமார் 6,30,000 மக்கள் வசிக்கும் நகரமான இஷெவ்ஸ்க், ரஷ்யாவின் உட்முர்ட் குடியரசின் பிராந்திய தலைநகரம் ஆகும், இது மாஸ்கோவிற்கு கிழக்கே 1,000 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது நடைபெற்று வரும் சூழலில், பள்ளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர் யார், அவர் எப்படி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார் என்ற ரீதியில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 7 மாத காலமாக நடைபெற்றும் நிலையில், ராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் கையெழுத்திட்டதாக அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News