உக்ரைனின் மிக முக்கிய லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதா...

Russia Ukraine War: உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கிழக்கு மாகாணமான Luhansk-ல் தீவிரமான போர் மூண்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2022, 03:50 PM IST
  • லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செல்லலாம்.
  • உக்ரைனின் இராணுவ நகரம் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை உக்ரைன் நிராகரித்தது.
  • லிசிசான்ஸ்கின் துணை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை ரஷ்யப் படைகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளன.
உக்ரைனின் மிக முக்கிய லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதா... title=

கடந்த நான்கு மாத காலங்களாக ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகள் தீவிரமாக போரிட்டு வரும் நிலையில்,  லிசிசான்ஸ்க்  நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செல்லலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒப்புக்கொண்டார்.

உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கிழக்கு மாகாணமான Luhansk-ல் தீவிரமான போர் மூண்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் கடைசி பெரிய கோட்டையான லிசிஸான்ஸ்க் நகரத்திற்கு உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகள் இரண்டும் தங்கள் கட்டுபாட்டில் இருப்பதாக உரிமை கோருகின்றன.  எனினும், லிசிசான்ஸ்க்  நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செல்லலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒப்புக்கொண்டார்.

கடந்த வாரம் சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் எதிர் பக்கத்தில் உள்ள லிசிசான்ஸ்கின் துணை நகரமான செவெரோடோனெட்ஸ்க்கை ரஷ்யப் படைகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளன. போரில் கடுமையான சண்டைகளுக்குப் பிறகு ரஷ்யா வசம் சென்றுள்ளது.

ரஷ்ய சார்பு லுஹான்ஸ்க் மக்கள் இராணுவத்தின் அதிகாரியான ஆண்ட்ரி மரோச்கோ கூறியயதாக, சனிக்கிழமையன்று , ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டிய செய்தியில், இராணுவத்தின் சிவப்பு சுத்தியல் மற்றும் அரிவாள் கொடி இப்போது லிசிஸான்ஸ்க் நகரில் உள்ள நிர்வாக கட்டிடத்தின் மீது பறக்கிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

இருப்பினும், உக்ரைனின் இராணுவம் நகரம் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை உக்ரைன் நிராகரித்தது. ஆனால் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் லிசிஸான்ஸ்க் நகரம் ரஷ்யாவின் கட்டுபாட்டில் செல்லக் கூடும் என்று ஒப்புக்கொண்டார்.

கியேவைக் கைப்பற்றத் தவறியதில் இருந்து அவர்களின் தாக்குதலின் மையமாக மாறிய டான்பாஸ் பகுதிக்குள் ஆழமாக நுழைய  முயற்சிக்கும் ரஷ்யப் படைகளுக்கு லிசிஸான்ஸ்க் நகரை கைப்பற்றியுள்ளது ஒரு பெரிய வெற்றி ஆகும்.

மாஸ்கோ சார்பு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ரஷ்யாவுக்கான தூதர் ரோடியன் மிரோஷ்னிக், ரஷ்ய தொலைக்காட்சியிடம், "லிசிஸான்ஸ்க் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது," ஆனால், "துரதிர்ஷ்டவசமாக, அந்நகரம் இன்னும் விடுதலை அடையவில்லை" என்று கூறினார்.

லுஹான்ஸ்க் போராளிகள் லைசிசான்ஸ்க் தெருக்களில் கொடிகளை அசைத்து ஆரவாரத்துடன் அணிவகுத்துச் செல்லும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் உக்ரைன் தேசிய காவலர் செய்தித் தொடர்பாளர் ருஸ்லான் முசிச்சுக் உக்ரேனிய தொலைக்காட்சியில் கூறுகையில், லிசிஸான்ஸ்க்  நகரம் உக்ரேனிய கட்டுபாட்டில் இருப்பதாகக் கூறியதாக AFP தெரிவித்துள்ளது.

இதற்கிடையுல், வடக்கு நகரமான கார்கிவில் ரயில் பாதைகள் மற்றும் மின்சார கம்பிகள் தொடர் தாக்குதலில் சேதமடைந்தன. எனினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தெற்கு நகரமான மைகோலைவ் - துறைமுக நகரமான ஒடேசாவிற்கு செல்லும் முக்கிய பாதையில் - பல வெடிப்புகள் ஏற்பட்டது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News