கிழக்கு உக்ரைனில் சமீபத்திய ரஷ்ய நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் இடையிலான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாயன்று கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்டாக் ஃப்யூசர்சில் சரிவு காணப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 'டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளை' 'சுயாதீனமாக' அங்கீகரிப்பதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவும் இந்த பகுதிகளுக்கு படைகளை அனுப்பியுள்ளது.
ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் சுமார் 4% உயர்ந்து $97.35 ஆனது. இது செப்டம்பர் 2014 க்குப் பிறகு மிக உயர்ந்த அதிகரிப்பாகும். S&P 500 ஃப்யூச்சர்ஸ் 2% சரிந்தது, நாஸ்டாக் ஃபியூச்சர்ஸ் 2.7% சரிந்தது.
ஐரோப்பிய பங்குகளும் ஒரே இரவில் 1.3% சரிந்து நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்தன. ரஷ்ய ரூபிள் வீழ்ச்சியடைந்தது, ரஷ்யாவின் MOEX ஈக்விட்டி குறியீடு 10.5% சரிந்தது. ஆஸ்திரேலியாவின் ASX 200 யும் இதைப் பின்பற்றி ஆரம்ப வர்த்தகத்தில் 1.3% சரிந்தது. திங்களன்று, அமெரிக்காவில் சந்தைகள் விடுமுறைக்காக மூடப்பட்டன.
மேலும் படிக்க | Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா
NAB அந்நியச் செலாவணி மூலோபாயத்தின் தலைவரான ரே அட்ரில், "இந்தச் சூழ்நிலைகளில், ஆபத்து அளவீடுகள் சந்தைகளை இயக்கும் உந்து சக்தியாக இருக்கின்றன" என்றார்.
நாணய வர்த்தகத்தில், ஆசியாவில் யென் 0.2% அதிகரித்து, கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் மிக அதிகமாக டாலருக்கு 114.50 ஆக உயர்ந்தது. யூரோ சுமார் 0.1% குறைந்து ஒரு வாரத்தில் $1.1296 ஆக குறைந்தது. ரஷ்ய ரூபிள் ஒரு மாதக் குறைந்த அளவான 80.289 டாலரைத் தொட்டது.
பதட்டங்கள் அமெரிக்க கருவூல அளவுகளையும் குறைத்தது. 10 ஆண்டு கருவூலத்தின் அளவுகோல் 5.5 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைந்து 1.8715% ஆக இருந்தது.
இதற்கிடையில் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் இறுதி கட்ட தாக்குதலை நடத்த தயாராக இருக்க அவர்களுக்கு கட்டளை இடப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில்தான் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகளை புகுத்த ரஷ்யா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR