ரஷ்யா உக்ரைன் மோதல்: இந்தியாவின் கவலைகளுக்கான காரணங்கள்..!!

2020 ஆம் ஆண்டில் பார்மா துறையில் உக்ரைனுக்கு 15 வது பெரிய ஏற்றுமதியாளராகவும், இரண்டாவது பெரிய இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2022, 07:44 PM IST
ரஷ்யா உக்ரைன் மோதல்: இந்தியாவின் கவலைகளுக்கான காரணங்கள்..!! title=

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், நாட்டின் பல பகுதிகளில் இந்திய குடும்பங்களின் கவலை அதிகரித்துள்ளது. உண்மையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் காரணமாக சிக்கியுள்ளனர். உக்ரைனில் சுமார் 18,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இது தவிர, சுமார் 8,000 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

உக்ரைனில் 76000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அதில்  சுமார் 19000 பேர் இந்திய மாணவர்கள். மேலும் உக்ரைனில் சுமார் 7963 இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 7541 பேர் NRI என்ப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 422 பேர் உள்ளனர்.

கியேவில் உள்ள இந்திய தூதரகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் வான்வெளி மூடப்பட்டதால், சிறப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என கூறியது. இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்கான பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உக்ரைனின் மேற்குப் பகுதிக்கு மக்களை மாற்றுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று தூதரகம் இந்தியர்களிடம் தெரிவித்தது. மேலும் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருங்கள் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

இதனுடன், தூதரகத்தின் சமூக ஊடக கணக்கு மற்றும் இணையதளத்தை தொடர்ந்து பார்த்து தகவல்களை அறிந்து கொள்ளுமாறு இந்தியர்களை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனுடன் அவர்கள் தூதரக உதவி எண்ணையும் வெளியிட்டுள்ளது. உதவி எண்கள் - +38 0997300483, 0997300428, 0933980327, 0635917881, 0935046170
 
இந்தியா உக்ரைன் வணிகம்

இந்தியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான வர்த்தகத்தைப் பற்றி குறிப்பிடுகையில், 2022 நிதியாண்டில் ஏப்ரல்-டிசம்பர் 2021-22 வரையிலான 9 மாதங்களில் இந்தியா-உக்ரைன் வர்த்தகம் 2.35 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 2.73 பில்லியன் டாலர் வணிகத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா - உக்ரைன் மோதல் இதை சாத்தியமாக்குமா என தெரியவில்லை.

உக்ரைனுடன் இந்தியாவுக்கு வர்த்தகம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில், ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், உக்ரைனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி $372 மில்லியன் ஆகும். அதே காலகட்டத்தில் இறக்குமதி 1.98 பில்லியன் டாலராக இருந்தது.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

2020-21 ஆம் ஆண்டில், உக்ரைனுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் $2.59 பில்லியன் மதிப்புடையது. இறக்குமதி மட்டும் $2.14 பில்லியன். UN Comtrade வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் பார்மா துறையில் உக்ரைனுக்கு 15 வது பெரிய ஏற்றுமதியாளராகவும், இரண்டாவது பெரிய இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. அதே நேரத்தில், உக்ரைன் அதே பிராந்தியத்தில் இந்தியாவிற்கான 23 வது பெரிய ஏற்றுமதி மற்றும் 30வது பெரிய இறக்குமதி நாடாகும்.

2020 ஆம் ஆண்டில், இந்தியா உக்ரைனுக்கு மருந்து (32.7%) மற்றும் மின்சார இயந்திரங்கள் (7.8%) ஏற்றுமதி செய்தது. மறுபுறம், உக்ரைனில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்கள் காய்கறி மற்றும் எண்ணெய் (73.3%), உரங்கள் (10.6%), அணு உலைகள், கொதிகலன்கள், இயந்திரங்கள் (5.2%) என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News