தானியங்களை திருடி விற்கும் ரஷ்யா: துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றச்சாட்டு

உக்ரேனிய தானியங்களை ரஷ்யா திருடியதாக துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றம் சாட்டினார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2022, 06:25 AM IST
  • தானிய ஏற்றுமதியாளர் உக்ரைன்
  • ரஷ்ய படையெடுப்பால் உணவு விலைகள் உயர்வு
  • உக்ரைனின் தானியங்களை ரஷ்யா திருடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டு
தானியங்களை திருடி விற்கும் ரஷ்யா: துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றச்சாட்டு title=

உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டிலுள்ள தானியங்களை திருடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

உலக அளவில் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது உக்ரைன் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, அந்நாட்டின் ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது, இது உலகளாவிய உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் தானியங்களை திருடி துருக்கி உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக துருக்கிக்கான உக்ரைன் தூதர் வாசில் போட்னர் வெள்ளிக்கிழமையன்று (2022, ஜூன் 3) குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | ரஷ்யப் போரின் 100வது நாள்: 20 சதவீத உக்ரைனை ஆக்ரமித்த ரஷ்யா

"ரஷ்யா உக்ரேனிய தானியங்களைத் திருடி, அவற்றை வெட்கமின்றி  கிரிமியாவிலிருந்து துருக்கி உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது" என்று தூதர் போட்னர் கூறினார். 

"இந்த பிரச்சினையைத் தீர்க்க துருக்கியின் உதவியை நாங்கள் கேட்டுள்ளோம்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய படையெடுப்பு 100 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. 

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சுமூகமான நிலையிஐ கொண்டுவரும் பணியில் துருக்கி ஈடுபட்டுள்ளது, இரு நாடுகளுடனும் துருக்கிக்கு இணக்கமான நல்லுறவு நிலவுகிறது.  

நேட்டோ உறுப்பினராக இருக்கும் துருக்கி, உக்ரைனுக்கு போர் ட்ரோன்களை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மோதலில் மத்தியஸ்தராக செயல்படவும் முயல்கிறது.

மேலும் படிக்க | போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா

ஆனால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதை துருக்கி தவிர்த்து வருகிறது. இதற்குக் காரணம், தானியங்கள் மற்றும் ஆற்றலுக்காக ரஷ்யாவையே துருக்கி நம்பியிருக்கிறது.  

ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளின் பேரில், உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான பாதுகாப்பான கடல் வழித்தடங்களுக்கு உதவ துருக்கி முன்வந்துள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை துருக்கிக்கு செல்லவுள்ள நிலையில், உக்ரைனின் துருக்கிக்கான தூதர், ரஷ்யா, தானியங்களை திருடி ஏற்றுமதி செய்வதாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா

கருங்கடலில் உள்ள உக்ரேனிய துறைமுகங்களை ரஷ்ய கடற்படை முற்றுகையிடடிருக்கிறது. இதனால் உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

உணவு பொருட்களை பெற முடியாததால், உலக நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதோடு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடங்கியதில் இருந்து உணவு தானியங்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News