மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா... இருளில் மூழ்கிய உக்ரைன்!

Russia Ukraine War: உக்ரைன் மீது 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதால், நடுக்கும் குளிருக்கு மத்தியில் தவிக்கும் உக்ரைன் மக்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2022, 09:51 AM IST
  • உக்ரைன் மக்களை வாட்டி வதைக்கும் ரஷ்ய தாக்குதல்
  • ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடும் உக்ரைன் அதிபர்
  • நடுங்கும் குளிரில் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்
மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா... இருளில் மூழ்கிய உக்ரைன்! title=

Russia Ukraine War: உக்ரைனின் மத்திய க்ரிவி ரிஹ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  தெற்கில் கெர்சனில் ஷெல் தாக்குதலில் மற்றொருவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (2022 டிசம்பர் 16, வெள்ளிக்கிழமை) உக்ரைன் மீது 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இது ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, நடைபெற்ற தாக்குதல்களில் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை அடுத்து, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில் நடைபெற்றா இந்தத் தாக்குதல், நாடு முழுவதும் அவசரகால நிலையை அமல்படுத்தத் தூண்டியது.  

நேற்று மாலை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆற்றிய வீடியோ உரையில், இன்னும் மிகப் பெரியத் தாக்குதல்களை நடத்த போதுமான ஏவுகணைகள் ரஷ்யாவிடம் இருப்பதாக கவலை தெரிவித்தார். எனவே, சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நட்பு நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.  

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடர்ங்கிய ரஷ்ய படையெடுப்பு தொடங்கி பத்து மாதங்கள் ஆன நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு புதிய பிரம்மாண்ட தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது,
இதுவரை நடைபெற்ற தாக்குக்தல்களில் நேற்று நடத்தப்பட்ட அதிக சேதத்தை ஏற்படுத்தாலாம், ஏனெனில் இப்போது அந்தப் பிராந்தியத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்!

முந்தைய தாக்குதல்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை விட, தற்போது உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படும் என்றும் அஞ்சப்படுகிறது..

ரஷ்யா வான் பாதுகாப்பை திசை திருப்பும் நோக்கத்தில், உக்ரைன் அருகே போர் விமானங்களை பறக்கவிட்டு, இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 76 ரஷ்ய ஏவுகணைகளில் 60 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் இராணுவத் தலைவர் தெரிவித்த நிலையில், நாட்டில் குறைந்தது ஒன்பது மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ தெரிவித்தார். 

உக்ரைனின் இராணுவத்தை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மாஸ்கோ கூறுகிறது. உக்ரேனியர்கள் இதைப் போர்க்குற்றம் என்று அழைக்கிறார்கள்.

தற்போது கீவ் நகரில் வசிக்கும் மக்களுக்கு 40% நீர் மற்றும் மின்சாரம் மட்டுமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பனியால் உறையும் இந்த குளிர்காலத்தில் இது மக்களின் வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | Pope Francis: கருவூலம்! தேவாலயம்! பள்ளிவாசல்! 2500 ஆண்டு புராதன மதத்தலம் சீரமைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News