புது டெல்லி: 2025 ஆம் ஆண்டில் 5.4 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா உத்தரவிட்ட ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்கும். அதாவது இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக உதவி தலைமை அதிகாரி ரோமன் பாபு ஷிக்கின் (Roman Babushkin) கூறுகையில், இந்தியாவுக்கான எஸ்-400 ஏவுகணை உற்பத்தி தொடங்கியுள்ளது. 2025 க்குள் விநியோகங்கள் நிறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.
ரஷ்ய தூதரகத்தில் நடந்த கூட்டத்தில் தூதர் நிகோலே குடாஷேவ், ஜம்மு-காஷ்மீரில் விவகாரம் என்பது "உள்நாட்டு பிரச்சனை" என்று விவரித்தார். மேலும் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு கொண்டு செல்லாமல், இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு முறையில் கையாள வேண்டும். சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் அறிவிப்பு விதிகளின் அடிப்படையில் பேச்சுவாரத்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
மேலும் பேசிய ரோமன் பாபு ஷிக்கின் கூறுகையில், எஸ்-400 ஏவுகணை இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் வழங்கப்படவில்லை. அல்மாஜ் அந்தே என்ற கம்பெனி எஸ்-400 ஏவுகணை தொகுப்புகளை தயாரித்து வருகிறது. 2025 க்குள் எஸ்-400 இந்தியாவிடம் வழங்கப்பட்டுவிடும் என ரோமன் பாபு ஷிக்கின் கூறினார். இந்த எதிர்ப்பு கருவி ஏவுகணை 2007 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ராணுவம் பயன்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.
புதுடில்லியில் நடைபெற்ற 19 வது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டின் போது பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான 5.43 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் அக்டோபர் 5, 2018 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.