இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (வயது 35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி மணந்தார்.
இந்நிலையில் இன்று இத்தம்பதியருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாக இங்கிலாந்து அரச குடும்பம் தெரிவித்துள்ளது. மேகனுக்கு பிரிட்டன் நேரப்படி இன்று காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எடையில் குழந்தை அழகாக இருப்பதாகவும் இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
தன்னுடைய பிரியத்துக்குரிய தோழியான இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை தனது குழந்தைக்கு ஞானத்தாயாகவும், நிக் ஜோனாஸ்சை ஞானத்தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள மேகன் பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாரி - மேகன் தம்பதியருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தை முதல் குழந்தை எனவும் அரியணைக்கு காத்திருக்கும் 7-வது குழந்தை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி பிரசவத்திற்கு சென்ற மேகனுக்கு துணையாக அவரது கணவர் ஹாரி-யும் பிரசவ வார்டில் இருந்ததாக தெரிகிறது.