இலங்கை நிதியமைச்சர் பதவியை கூடுதலாக ஏற்ற ரணில் விக்கிரமங்கே

இலங்கையின் நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமங்கே கூடுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : May 25, 2022, 01:09 PM IST
  • இலங்கையின் நிதியமைச்சர் பொறுப்பு
  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்பு
  • அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு
இலங்கை நிதியமைச்சர் பதவியை கூடுதலாக ஏற்ற ரணில் விக்கிரமங்கே  title=

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். 

இலங்கை மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதனை சீரமைக்க இலங்கை அரசு வெளிநாட்டு வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. வரலாறு காணாத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பட்ஜெட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்ற பின்பு பல்வேறு அமைச்சர்கள் பதவி ஏற்றாலும் நிதித்துறைக்கான பொறுப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவே நிதித்துறையையும் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது கட்சிக்கே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிய நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க வேண்டுமானால், நிதியமைச்சர் பதவியை தனக்கே வழங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இன்று நிதியமைச்சராகப் பதவி ஏற்றார். சர்வதேச நாணய நிதியுதவிக்காக பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இலங்கை: புதிதாக 9 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News