வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடென் அமெரிக்க குடியுரிமை மசோதா 2021 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச் சட்டம் இயற்றப்பட்டால், ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயனடைவார்கள்.
முன்னதாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்
இதன் மூலம், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காக ஒரு நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும். இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னர், எச் -1 பி (H1-B) விசா வைத்திருப்பவர்களைச் சார்ந்தவர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் பயனடைவார்கள்.
2021 ஆம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமைச மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டு சட்டமாக்கப்பட உள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், ஆவணங்கள் இல்லாமல் வாழ்ந்து வரும் மக்கள் சட்டபூர்வமாக நாட்டின் குடியுரிமை பெற வழிவகுக்கும்.
இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்
செனட்டர் பாப் மெனண்டெஸ் மற்றும் பிரதிநிதிகள் சபை லிண்டா சான்செஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியேற்ற சீர்திருத்தத்திற்காக அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 இயற்றப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சட்டத்தின் கீழ், க்ரீன் கார்டுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவர்களுக்கு நிரந்திர குடியுரிமை கிடைக்கும். இந்தச் சட்டத்தின் இந்தியர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள்
பிடென் ஜனவரி 20 அன்று பதவி ஏற்றுக் கொண்டு மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார். இதன் கீழ், நிலுவையில் உள்ள வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசா அங்கீகரிக்கப்படும். ஒவ்வொரு நாட்டிலும் விசாக்களுக்கான வரம்பும் நீக்கப்பட்டு, காத்திருக்கும் கால அளவும் குறைக்கப்படும்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வரும் சுமார் 11 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவது குறித்தும் இந்த மசோதா வழிவகுக்கிறது. அவர்களுக்கு 8 ஆண்டுகள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அகதிகளாகவும் அமெரிக்காவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் வாழ வழி எளிதாக இருக்கும்
இந்த மசோதா அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இருந்து STEM பாடங்களை பட்டம் பெற்றவர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான விசாவையும் வழங்குகிறது
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பாடங்களில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளது. இருப்பினும், இந்த மசோதா மேலவையில் நிறைவேற்றப்படுவதற்கு, அக்கட்சிக்கு 10 குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
ALSO REA D| NASA: செவ்வாய் கிரகத்தை ஆராயும் விடாமுயற்சியில் Rover
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR