இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது, பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார்

Pakistan Political Update: இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2022, 07:38 AM IST
  • இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது
  • பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார்
  • பாகிஸ்தான் அரசியல் புதுப்பிப்பு
இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது, பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் title=

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறறது. அந்த வகையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியும் பிற நாடுகள் மீது அதன் தாக்கமும் 

தற்போது பாகிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார். பிற்பகல் 2 மணிக்குள் பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படும். ஏப்ரல் 11 அன்று பாகிஸ்தானுக்கு புதிய பிரதமரைப் பெறுவார். அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளார்.

Imran Khan in big trouble! Several Pakistan MPs withdraw support, govt in  danger | World News | Zee News

இந்நிலையில், இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான்cc. நாட்டின் புதிய பிரதமர் யார் நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News