பயங்கரவாதிகளின் அடைக்கலாக திகழும் ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லைகள் : US

ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லைகள் பயங்கரவாதிகளின் அடைக்கலமாக திகழ்கின்றன என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2020, 08:11 PM IST
  • பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லைகள் அடைக்கலமாக திகழ்கின்றன என்று அமெரிக்கா கூறியுள்ளது
  • ஆஃப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கான ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாறக்கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது
  • ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சுமார் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் அடைக்கலாக திகழும் ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லைகள் : US title=

ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லைகள் பயங்கரவாதிகளின் அடைக்கலமாக திகழ்கின்றன என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அல்-கொய்தா, லஷ்கர்- ஈ-தொய்பா (LET), தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ISIS -கோரசன் (ISIS-K) போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லைகள் அடைக்கலமாக திகழ்கின்றன என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ALSO READ | இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் (Afghanistan) குறித்த அமெரிக்க (US) பாதுகாப்புத் துறை தனது அறிக்கையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதி பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கும் இடமாக உள்ளது என்று கூறியுள்ளது. இந்த குழுக்களில் அல்-கொய்தா, லஷ்கர்- ஈ-தொய்பா (LET), தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ISIS -கோரசன் (ISIS-K) போன்ற பயங்கரவாத குழுக்கள் அடங்கும்.

இதனால் பல்வேறு பாதுகாப்பு சவால்கள் எழுந்துள்ளன என்றும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. மேலும் இது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நலனில் அமெரிக்காவிற்கு அக்கறை உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கான ஒரு பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தப்படக்கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆஃப்கான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் அமெரிக்காவையோ அல்லது அதன் நட்பு நாடுகளையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டையோ, தாக்கலாம். அதனால், ஆப்கானிஸ்தானில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு நீடித்த தீர்வை நோக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு  அமெரிக்கா அதாரவு தரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | சீனா தொடர்பாக Zee News நடத்தும் மிக பெரிய கருத்துக் கணிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு..!!!

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) ஜூன் மாத அறிக்கையில் ஆப்கானிஸ்தானில் சுமார் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா போன்ற பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 1000 பயங்கரவாதிகள் உள்ளனர் என்று அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

ஐ.நா. கண்காணிப்புக் குழு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC)  அளிக்கும் தனது வருடாந்திர தொழில்நுட்ப தகவல்களில், ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 6,500 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் அந்த பிராந்தியத்திற்கு உள்ள ஒரு சிக்கலான சவாலாக இருக்கின்றனர் என்றும், தீவிர கண்காணிப்பு தேவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News