சீனாவின் துரோகத்தினால் கோபமாக உள்ள அமெரிக்கா NRI நடத்திய அமைதி போராட்டம்...!!!

அமெரிக்கா (America) சிகாகோவில் (Chicago), உள்ள NRI, அதாவது அமெரிக்கா வாழ் இந்தியர்கள், சீனாவின் இந்தியாவிற்கு எதிரான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்தினர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2020, 04:54 PM IST
  • அமெரிக்கா சிகாகோவில் உள்ள NRI, சீனாவின் இந்தியாவிற்கு எதிரான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்தினர்.
  • சீனா பரப்பிய வைரஸால் உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.
  • சீனா தனது எல்லைகளை விரிவுபடுத்தும் பேராசையை கைவிட வேண்டும்.
சீனாவின் துரோகத்தினால் கோபமாக உள்ள அமெரிக்கா NRI நடத்திய அமைதி போராட்டம்...!!! title=

சிகாகோவில் (Chicago): அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பெருமளவிலான இந்தியர்கள் (Indian-American community) வாழ்ந்து வருகின்றனர்.  அமெரிக்கா வாழ் இந்தியர்கள், சீனாவின் இந்தியாவிற்கு எதிரான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்தினர். சீனா லடாக்கில் அத்துமீறியது தொடர்பாக (India china face-off) சீனாவின் மீதான கோபத்தை வெளிப்படுத்தினர்.   அவர்கள் சீனா செய்து வரும் அத்துமீறல்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதன ஒரு தலை பட்சமான நடவடிக்கைகளையும் எதிர்த்தனர். திபெத், தைவான் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் கைவிட வேண்டும் என கோரினர். கொரோனா (Corona Virus) பரவல் காரணமாக, சிகாகோவில் (Chicago) கூட்டம் கூடுவதில் தடை உள்ளது. அதனால் இந்த அமைதி போராட்டத்தில் குறைந்த அளவிலான மக்களே பங்கேற்றனர்.

ALSO READ | சீனாவில் மீறப்படும் மனித உரிமைகள்... நடவடிக்கை எடுக்க UN வல்லுநர்கள் கோரிக்கை...!!!

சிகாகோவில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்களின் கைகளில் இந்தோ-அமெரிக்க கொடிகள் மற்றும் சீன நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் பதாகைகள் இருந்தன. ​​சீன தயாரிப்புகளை புறக்கணித்து, மக்கள், அமெரிக்க தயாரிப்புகளை அதிக அளவில் வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என அமெரிக்க NRIக்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். சீனா பல நாடுகளை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்த சதி வேலையில் ஈடுபடுவது ஆகியவை குறித்து அங்கு கூடியிருந்த எதிர்ப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

சீனா பரப்பிய கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என அவர்கள் கூறினர். இந்தியாவை தவிர வியட்நாம், தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் சீனா செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். சீனாவின் சதி வேலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும்,  நாகரீகத்தை பின்பற்றி நடந்து கொள்ளும்படி  சீனாவிடம் வலியுறுத்தவும் நாங்கள் தாங்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கு கூடியிருந்த எதிர்ப்பாளர்களில் ஒருவர் கூறினார்.

ALSO READ | காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!

உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து, பலரின் வாழ்க்கையை புரட்டி போட காரணமான கொரோனா தொற்றுநோயை பரப்பியதாக போராட்டகாரர்கள் சீனாவை குற்றம் சாட்டினர். சீனா உலகத்தையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனா தனது பேராசை எண்ணத்தை மாற்றி கொண்டு, அதன் மக்களை அடிமைகளாகப் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அங்கிருந்த எதிர்பாளர் ஒருவர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, கனடாவின்(Canada) வான்கூவரிலும், லடாக்கில் சீன துருப்புக்கள் நடத்திய வன்முறை நடவடிக்கைக்கு எதிராக இந்திய சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News