பெலராரஸ் வெளியுறவு அமைச்சரின் கொலைக்கு காரணம் நோவிசோக் விஷமா? தீவிர விசாரணை

Belarus Foreign Minister Killed: பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி மரண விவகாரத்தில், ரஷ்யா மீது சந்தேகக் கணைகள் திரும்புகின்றன 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2022, 09:06 AM IST
  • நோவிசோக் விஷத்திற்கு மற்றுமொரு பலியா?
  • பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி கொலை
  • ரஷ்யாவை நோக்கி நீளும் சந்தேகக் கணைகள்
பெலராரஸ் வெளியுறவு அமைச்சரின் கொலைக்கு காரணம் நோவிசோக் விஷமா? தீவிர விசாரணை title=

Russia-Ukraine War: பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி மரண விவகாரத்தில், ரஷ்யா மீது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. விளாடிமிர் மெக்கியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விஷப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 29) மெக்கியின் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தன. 64 வயதான முன்னாள் உளவாளி மற்றும் இராஜதந்திரி விளாடிமிர் மெக்கி ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக தி டெய்லி மெயிலின் அறிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் அவர் ரகசியத் தொடர்பில் இருந்ததாகவும், அதிபர் விளாடிமிர் புடினுடன்பெலாரஸ் சேரவிடாமல் தடுக்க வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி விரும்பியதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று  டெலிகிராம் சேனலான ஒப்ராஸ் புடுஷேகோ செய்தி வெளியிட்டுள்ளது. மெக்கியைக் காக்கும் பாதுகாப்புக் குழுவும், பொய் கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

மெக்கியின் மரணத்தால் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பல அறிக்கைகள் கூறுகின்றன. ரஷ்யா தன்னைக் கொன்றுவிடக்கூடும் என்று, பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ  பயப்படுகிறார். இந்த பயத்தின் காரணமாக, அவர் தனது வேலையாட்களையும், உணவு சமைக்கும் சமையல்காரரையும் மாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | நரப்பு மண்டலத்தை தாக்கும் நோவிசோக் விஷம்... எல்லை மீறுவாரா புடின்!

விளாடிமிர் மெக்கியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று (நவம்பர் 30, 2022) வந்துவிடும் என்று டெலிகிராம் சேனல் விஷன் ஆஃப் தி ஃபியூச்சர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மெக்கியின் ட்ரோஸ்டி இல்லத்தின் பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பாலிகிராஃப் சோதனை நடத்தப்படும் என்று டெலிகிராம் சேனல் விஷன் ஆஃப் தி ஃபியூச்சர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக்கியின் மரணம் பற்றிய ஊகங்களுக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு?

பெலாரஸ் இராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலம் புட்டினின் போருக்கு லுகாஷென்கோ ஆதரவளிக்க மறுத்துவிட்ட்டார் என்பதும், ரஷ்யாவுடன் தனது நாட்டைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததார் பெலாரஸ் அதிபர் என்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 40 வருடங்களுக்கு பிறகு சீறிய எரிமலை! தங்கமாய் ஓடும் எரிமலைக் குழம்பு லாவா

ரஷ்ய அதிபர் புடினின் விமர்சகர் மற்றும் நாடுகடத்தப்பட்ட தொழிலதிபர் லியோனிட் நெவ்ஸ்லின், இந்த மரணத்திற்கு விளாடிமிர் புடின் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகிறார். மெக்கியின் மரணம் "ஒரு சிறப்பு FSB ஆய்வகத்தில் செய்யப்பட்ட விஷத்தால்" ஏற்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

'ரஷ்யாவின் சிறப்பு சேவைக்கு நெருக்கமான' ஆதாரங்களை அவர் மேற்கோள் காட்டினார். இறப்பதற்கு முன், மெக்கி கடந்த வாரம் பெலாரஸில் உள்ள இராணுவ சரக்கு விமானத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது ஒரு வீடியோவில் காணப்படுகிறது. அவருக்கு எந்த நோயும் இல்லை. சிறப்பு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட விஷத்தை செலுத்தினால் பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு காரணமாக மரணம் ஏற்படுகிறது என்று லியோனிட் நெவ்ஸ்லின் கூறினார்.

கடந்த காலங்களில், ரஷ்யாவுக்கு எதிரானவர்களை  முடக்க, அந்நாடு நோவிசோக் விஷத்தை பயன்படுத்தியது. பெரிய அளவிலான வன்முறை சம்பவங்களை நடத்தவும் இந்த நஞ்சைப் பயன்படுத்தலாம் என்று கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சீனாவுடனான நட்பின் பொற்காலம் முடிந்துவிட்டது: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News