ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சுவீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் கரோலின்ஸ்கா ஆய்வு மையம் நோபல் பரிசு வழங்குகிறது.
2016-ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசை பிரான்சின் ஜான் பெர்ரி சாவேஜ் , அமெரிக்காவின் ப்ரேசர் ஸ்டோடர்ட், நெதர்லாந்தின் பெர்னார்ட் பெரிங்காவுக்கும் என மொத்தம் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் தெளலஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு ஜப்பான் நாட்டின் டோக்கியோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் விஞ்ஞானி யோஷினோரி ஒஷுமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு கொலம்பிய அதிபர் மானுவல் சாண்டோஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் குழு அறிவித்தது. கொலம்பியாவில் 50 ஆண்டு கால கிளர்ச்சியை முடிவுக்குகொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பாடுபட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
BREAKING NEWS The 2016 #NobelPrize #Peace is awarded to Colombian President Juan Manuel Santos pic.twitter.com/7OhiCruc1o
— The Nobel Prize (@NobelPrize) October 7, 2016