அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பொறுப்பை ராஜினாமா செய்த நிகி ஹேலி

அமெரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிகி ஹேலி இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியிலிருந்து விலகினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2018, 09:08 PM IST
அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பொறுப்பை ராஜினாமா செய்த நிகி ஹேலி title=

அமெரிக்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிகி ஹேலி இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியிலிருந்து விலகினார். அவரது ராஜினாமாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுக்குறித்து டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "எனது தூதர் ஆனா தோழி நிகி ஹேலியை குறித்து ஓவல் அலுவலகத்தில் இருந்து பெரிய அறிவிப்பு காலை 10.30 மணியளவில் வரும்" எனக் கூறியுள்ளார்.

 

இவரது டிவிட்க்கும், நிகி ஹேலி ராஜினாமாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் உண்மை என்னாவென்று தெரியவில்லை.

டொனால்ட் டிரம்ப்பின் மிக நம்பகமான ஆலோசகர்களில் ஒருவரான நிகி ஹேலி, கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது ராஜினாமா குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தகவல்படி, இன்று ஓவல் அலுவலகத்தில் இருவரும் ஊடகங்களை சந்திக்கவுள்ளனர்.

Trending News