முதல் முறையாக சீனாவுக்கு செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அடுத்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் அரசு முறை பயணமாக சீனாவுக்கு செல்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2018, 11:37 PM IST
முதல் முறையாக சீனாவுக்கு செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் title=

பாகிஸ்தான் பிரதமராக தெஷ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார்....! 

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு பல நாட்டு தலைவர்கள வாழ்த்து தெரிவித்தனர். இந்திய தரப்பில் பிரதமர் மோடியும் வாழ்த்து கூறினார். 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் முதல் முறையாக அரசு முறை பயணமாக அடுத்த மாதம் வெளிநாடு செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமராக இம்ரான் கான் முதல் முறையாக தனது நட்பு நாடான சீனாவிற்கு செல்கிறார். ஏற்கனவே தங்கள் நாட்டிற்கு வரும்படி இம்ரான் கானுக்கு அழைப்பு விடுத்திருந்தார் சீன அதிபர் லி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் போது சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending News