நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்

ஒலியின் அரசு மிக பெரிய அளவில் ஊழல் செய்ததாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அவரது நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவலை மிக மோசமாக கையாண்டது என்பது குறித்து பல விமர்சனங்களை எதிர்கொண்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2021, 10:51 PM IST
  • நேபாளத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பிறகு ஓலி பிரதமரானார்.
  • ஒலியின் அரசு மிக பெரிய அளவில் ஊழல் செய்ததாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
  • நேபாள பிரதமர் ஒலியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம் title=

நேபாளத்தில் (Nepal) அரசியல் நெருக்கடி நீட்டிக்கும் நிலையில், பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில், பிரதமரை எதிர்க்கும் பிரிவினர் கூட்டிய கூட்டத்தில் , அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளது.

நேபாளத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற பிறகு ஓலி பிரதமரானார்.
ஒலியின் கட்சியும் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் கட்சியும் இணைந்து, ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

ஆயினும், K.P Sharma Oli மற்றும் கட்சியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் தலைவரான புஷ்ப கமால் தஹால் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன, அவர் கட்சியின் இணைத் தலைவராகவும் இருக்கிறார். ஐந்தாண்டு பிரதம மந்திரி பதவியை தங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்வதாக இருவரும் முன்பு ஒப்புக்கொண்டனர், ஆனால் தஹாலுக்கு பொறுப்பை வழங்க ஓலி மறுத்துவிட்டார்.

ஒலியின் அரசு மிக பெரிய அளவில் ஊழல் செய்ததாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அவரது நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவலை மிக மோசமாக கையாண்டது என்பது குறித்து பல விமர்சனங்களை எதிர்கொண்டது.

ALSO READ | நேபாளத்தில் அரசியல் நெருக்கடி.. நாடாளுமன்றத்தை கலக்க பரிந்துரை..!!!

 

அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து சீனாவிற்கு (China) நெருக்கமாக செயல்பட்டு நேபாளத்தின் நீண்ட கால நட்பு நாடான இந்தியாவில் இருந்து விலகிச் சென்றதாகவும் பிரதமர் ஒலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் ஒலியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் ஏப்ரல் 30 மற்றும் மே 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டன. நேபாள பிரதமர் ஒலியின் முடிவை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

கட்சியிடம் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தார் என குற்றம் சாட்டிய கட்சியில் உள்ள எதிர்ப்பு தலைவர்கள் ஒலியிடம் விளக்கம் கேட்டனர். ஆனால், அவர் சரிவர பதில் அளிக்காததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரச்சண்டா என்ற முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் மற்றும் மாதவ் நேபாள் தலைமையினான பிரிவினர் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்கூட நீக்குவதாக முடிவெடுத்தது.

ALSO READ | உலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 குழந்தைகள்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News