கொரோனா தொற்று அனைவரது வாழ்க்கை முறையையும் வெகுவாக மாற்றியுள்ளது. நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத வகையில் சிலரது வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பிரிவினர்தான் மாலுமிகள்.
கொரோனா காரணமாக மாலுமிகளின் வாழ்க்கையின் வேகமும் குறைந்துள்ளது. கடந்த 16 மாதங்களாக நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாலுமிகள், கடற்படை வீரர்கள் ஆகியோர் துறைமுகங்கள் அல்லது கப்பல்களில் சிக்கித் தவிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் உதவி பொறியாளர் எலோன் சுமார் 16 மாதங்கள் கப்பலில் சிக்கியிருந்தார்.
ALSO READ: இந்த ஆயுர்வேத மருந்தால் COVID-யை குணப்படுத்த முடியும்: AIIA ஆய்வு...!
திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது
கடந்த வாரம், எலோனின் கப்பல் பிரேசிலின் சாண்டோஸ் துறைமுகத்தை அடைந்தபோது, அவரது திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்ட தேதி கடந்துவிட்டிருந்தது. இதற்கிடையில், எலோன் மூன்று முறை வீட்டிற்கு செல்ல முயன்றார். ஆனால் அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை. எலோனைப் போல கப்பலில் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.
மறுபுறம், கொரோனா தொற்றுநோயைக் (Corona Pandemic) கருத்தில் கொண்டு, துறைமுக நிர்வாகம் கப்பல்களுக்கு இடம் கொடுக்கவும், புதிய மனிதர்களின் வருகையையும் தவிர்க்கிறது. சில நாடுகளில் கப்பல் குழுவினரை மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் கப்பல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகார்ட், பல்மருத்துவரிடம் செல்ல முடியாததால் சில மாலுமிகள் தாங்களாகவே தங்கள் பற்களை பிடுங்கி வருவதாகத் தெரிவித்தார்.
அதிகபட்சம் 11 மாதங்கள் அனுமதிக்கப்படுகின்றன
சர்வதேச ஒப்பந்தத்தின்படி, ஒரு கப்பலில் குழு அதிகபட்சமாக 11 மாதங்கள் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், 16 மாதங்களுக்கும் மேலாக கப்பல் குழுக்களை கப்பலில் வைத்திருப்பது மாலுமிகளின் உரிமைகளை மீறுவதாக இருக்கும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அவர்களது நிலைமை பிணைக்கப்பட்ட தொழிலாளர்களைப் போல மாறிவிட்டது என்பது அவர்களது கருத்தாக உள்ளது. சில பன்னாட்டு நிறுவனங்களும் இந்த முடிவால் மகிழ்ச்சியடையவில்லை. தொழில்துறை நடவடிக்கை காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அவர்களிடையில் உள்ளது.
ALSO READ: அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் கொரோனா தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்கம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR