இந்தியாவை மீண்டும் சீண்டிய மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்... கடும் எதிர்ப்பினால் அந்தர் பல்டி!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2024, 04:50 PM IST
இந்தியாவை மீண்டும் சீண்டிய  மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்... கடும் எதிர்ப்பினால் அந்தர் பல்டி! title=

மாலத்தீவின் முகமது முய்ஸூ அரசின் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட  முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார். மாலத்தீவின் முன்னாள் அமைச்சர் ஷியுனா இந்திய மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார். இதன் காரணமாக, இந்தியர்கள் கடும் எதிர்ப்பை காட்டியது, ஷியூனா இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார்

ஷியுனா வெளியிட்ட பதிவில், மாலத்தீவு எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) பிரச்சார போஸ்டரை பதிவிட்டிருந்தார். ஆனால், அதில், கட்சி சின்னத்திற்கு பதிலாக மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரம் பயன்படுத்தப்பட்டது.  தற்போது மாலத்தீவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரம்  நடைபெற்று வருகிறது. மாலத்தீவில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான MDP கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னாள் அமைச்சர் ​​ஷியுனா எதிர்க் கட்சி விமர்சனம் செய்ததுடன், அதிபர் முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். அவர் தனது X தளத்தின் கணக்கில், 'MDP ஒரு பெரிய தோல்வியை நோக்கி நகர்கிறது. மாலத்தீவு மக்கள் அக்கட்சியை விரும்பவில்லை என பதிவிட்டார்.  அதில், அவர் பதிவிட்ட புகைப்படத்தில் கட்சி சின்னத்திற்கு பதிலாக மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரம் பயன்படுத்தப்பட்டது.

ஷியுனாவின் சர்ச்சைக்குரிய பதிவுக்கு,  இந்திய சமூக ஊடக பயனர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, ஷியுனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் முய்ஸுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதனை அடுத்தும் தனது பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க | அதிர்ஷடம்னா இதுதான்... பட்டனை தப்பா அழுத்தியும் அடிச்சது லாட்டரி - கோடியில் புரளும் பெண்

பதவி நீக்கம் செய்யப்பட்ட மாலத்தீவு அமைச்சர் ட்விட்டரில் மன்னிப்புக் கோரி, “நான் எந்த உள்நோக்கத்துடனும் பதிவிடவில்லை. என செயலுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மாலத்தீவின் எதிர்க்கட்சிக்காக நான் பயன்படுத்திய படம் இந்தியக் கொடியைப் போன்றது என்று என்னிடம் கூறப்பட்டது. இது முற்றிலும் தற்செயலான நிகழ்வு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டார்.

மேலும், மாலத்தீவுகள் இந்தியாவை மதிக்கிறது என்றும் அதனுடனான அதன் உறவுகளை ஆழமாக மதிக்கிறது என்றும் ஷுனா மேலும் குறிப்பிடார். இந்தியா தொடர்பாக ஷியுனா சர்ச்சைக்குரிய பதிவை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷியுனா உள்ளிட்ட சில மாலத்தீவு அதிகாரிகள், பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தின் படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் ட்வீட்களை வெளியிட்டனர்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி, லட்சத்தீவு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக அங்கு சென்று ஆழ்கடல் நீச்சலில் ஈடுபட்டு புகைப்படங்களை வெளியிட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில், ஷியுனா ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இருப்பினும், சர்ச்சை அதிகரித்தபோது, ​​​​அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார், பின்னர் முய்சு அரசாங்கத்தால் அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும், அப்போதிலிருந்தே மாலத்தீவுக்கும் இந்தியா இடையே அவ்வளவாக நல்லுறவு இல்லை. மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டார். மாலத்தீவு, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டாலும், இந்தியா அந்த நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

மேலும் படிக்க | காதலனுடன் ஆசிரியர் செய்த காரியத்தை பாருங்க... குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - வாழ்நாள் தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News